வால்மார்ட்டில் குதிரைகளுடன் நுழைந்த இளைஞர்கள் – வெளியான அதிர்ச்சி காரணம் – வைரலாகும் வீடியோ
Men Ride Horses Inside Walmart: எமோஷனல் சப்போர்ட் அனிமல் என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் 4 இளைஞர்கள் குதிரைகளுடன் நுழைந்திருக்கின்றனர். 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் தங்கள் செயலுக்கு அவர்கள் அளித்த விளக்கம் மக்களிடையே அதிரச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் வாழ்க்கையில் மன அழுத்தம் (Stress) உளவியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், மனிதர்கள் பலரும் தங்களது மனநலம் மேம்படுவதற்காக எமோஷனல் சப்பபோர்ட் அனிமலை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக மக்கள் நாய் மற்றும் பூனை போன்ற மிருகங்களையே எமோஷனல் சப்போர்ட் அனிமலாக பயன்படுத்துவர். இந்த நிலையில் அமெரிக்காவில் (America) 4 இளைஞர்கள் குதிரைகளை எமோஷனல் சப்போர்ட் அனிமலாக பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் (Social Media) ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 4 இளைஞர்கள் வால்மார்ட்டில் குதிரைகளுடன் உள்ளே நுழைகின்றனர். இது குறித்து நான்கு பேரில் ஒருவரான மேசன் வெப் தாங்கள் குதிரையை எமோஷனல் அனிமலாக பயன்படுத்துவதாக தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் உள்ள வால்மார்ட்டில் நான்கு இளைஞர்கள் குதிரையில் சவாரி செய்தபடி நுழைந்தனர். இதனையடுத்து ஊழியர் ஒருவர் அவர்களை வெளியில் செல்லுமாறு எச்சரித்தார். பின்பு காவல்துறையினருக்கு போன் செய்து புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குதிரைகளுடன் வால்மார்ட்டில் நுழைந்த இளைஞர்கள்
NEW: Louisiana man says he rode his horse through a Walmart because he had to bring his “emotional support animal” with him.
Lmao.
Mason Webb and the “Cut Throat Cowboys” went viral after they rode their horses around the store.
“It was fun, we were famous. That’s all. We… pic.twitter.com/TztCIysg9c
— Collin Rugg (@CollinRugg) April 12, 2025
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் என்ன காரணத்துக்காக இவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என நெட்டிசன்கள் கேள்வி வருகின்றனர். இந்த நிலையில் 4 பேரில் ஒருவரான மேசன் வெப் குதிரைகளை தாங்கள் எமோஷனல் சப்போர்ட் அனிமலாக பயன்படுத்துவதாக தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளைத் தான் எமோஷனல் சப்போர்ட் அனிமலாக பயன்படுத்துவர்.
குதிரைகளுடன் வால்மார்ட் வந்த இளைஞர்கள் மீது வழக்கு
இதுகுறித்து மேலும் பேசிய வெப், நாங்கள் பொழுதுபோக்குக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் அப்படி செய்தோம். எங்களால் யாருக்கும் பாதிப்பில்லை. நாங்கள் இப்படி செய்வது வழக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இதே போல கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட்டில் இரண்டு பேர் தங்கள் செல்லப்பிராணியான மான் குட்டியை அழைத்து வந்தனர். இது சர்ச்சையான நிலையில் அதிகாரிகள் அவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் அந்த மான் பாதுகாப்பாக ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது.
மேலும் கடந்த 2023 ஜனவரியில், அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள ஜவுளி கடைக்கு ஒரு மாடு தானாகவே நுழைந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எமோஷனல் சப்போர்ட் அனிமல் என்ற பெயரில் அல்லது தாங்கள் பிரலமாக வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விலங்குகளை கொண்டு செல்லும் செயல்கள் அதிகரிக்கின்றன. இது சில நேரங்களில் சட்ட விதிமீறலாகவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் மாறுகின்றன.