எங்களைப் பற்றி
ABCL ல் இயக்கப்படும் TV9, செய்திகளை ஆழமாகவும், துல்லியமாகவும் மற்றும் தெளிந்த விளக்கத்துடன் வழங்குவதில் உறுதியாக இருக்கும் ஒரு முன்னணி 24 மணி நேர செய்தி நெட்வொர்க் ஆகும். இது தேசிய மற்றும் உள்ளூர் செய்திகளை அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பிராந்திய மொழியில் கொடுத்து வருகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட TV9, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் வலுவாக காலூன்றியுள்ளது. இந்தியாவின் முதன்மையான செய்தி தளமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள TV9 உலகளாவிய, தேசிய மற்றும் உள்ளூர் விவகாரங்களை விரைவாகவும் தெளிவாகவும் வழங்கி வருகிறது.
2004 ஆம் ஆண்டு துடிப்பான பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்ட TV9, இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பலராலும் பார்க்கப்படும் செய்தி நெட்வொர்க் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது. அச்சமற்ற பத்திரிகை, புலனாய்வு தேடல் மற்றும் சரியான விதத்தில் செய்தியை கொடுத்தல் ஆகியவற்றிற்கான எங்கள் அர்ப்பணிப்பு பத்திரிகை துறையில் புது அளவுகோல்களை அமைத்துள்ளது.
TV9 தமிழ் (www.tv9tamilnews.com) 2025 இல் TV9 நெட்வொர்க்கின் பிரத்யேக டிஜிட்டல் செய்தி தளமாக தொடங்கப்பட்டது, இது தமிழ் பேசும் பார்வையாளர்களுக்கு செய்தியை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உலக நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் செய்திகளை டிஜிட்டல் மூலம் விரைவாக கொண்டு செல்லும் தளமாக நாங்கள் இருக்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆழமான, சிந்திக்க வைக்கும் செய்திகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.
பல்வேறு தலைப்புகளில் எங்கள் செய்திகள்:
– முக்கியச் செய்திகள் & நடப்பு நிகழ்வுகள்
– தமிழ்நாடு உள்ளூர் செய்திகள்
– அரசியல் & நிர்வாகம்
– குற்றம் & சட்டம்
– நிதி & பொருளாதாரம்
– பொழுதுபோக்கு & சினிமா
– விளையாட்டு & நிகழ்வுகள்
– அறிவியல் & தொழில்நுட்பம்
– சுகாதாரம் & உடல்நலம்
– வைரல் செய்திகள் & சோஷியல் மீடியா ட்ரெண்டிங்ஸ்
TV9 Tamil ஆகிய நாங்கள் உடனுக்குடன் செய்திகளை, தகவல்களை விரைந்து கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறோம் . எங்கள் பார்வையாளர்கள் சமீபத்திய செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம். தமிழ்நாடு மற்றும் எல்லை கடந்த தமிழ் மக்களுக்கு பாரபட்சமற்ற, உண்மை அடிப்படையிலான செய்திகளை வழங்குவதே எங்கள் உறுதிப்பாடாகும்.
மிகவும் நம்பகமான மற்றும் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளுக்கும், அப்டேட்களுக்கும் எங்களுடன் இணைந்திருங்கள்!