96 ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?
Vatican City : உலகின் ஒரே மருத்துவமனை இல்லாத நகரம் எது தெரியுமா, அதுதான் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம். இந்த நகரத்தில் சுமார் 96 ஆண்டுகளாக ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது இத்தாலியின் ரோமில் அமைந்திருக்கும் இந்த சிறிய நகரம் கத்தோலிக்க திருச்சபையின் மையம். அதன் சிறிய அளவு மற்றும் சுத்தம் தொடர்பான காரணங்களால் மருத்துவமனை அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

உலகத்தில் பல்வேறு நாடுகள் பல, பிரம்மாண்ட நகரங்கள் இருக்கிறது. ஒரு நகரம் என்றால் அதில் பல வசதிகள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக மருத்துவ வசதி (Medical facility) , உணவு வசதி, அத்தியாவசிய பொருட்கள் வசதி (Essential goods facility) மற்றும் பல வசதிகள் இருந்தால்தான் அது மக்கள் வாழ்விற்கு ஏற்ற நகரமாகும். ஆனால் உலகத்திலே மருத்துவமனையை இல்லாமல், மேலும் சுமார் 96 ஆண்டுகளாகக் குழந்தையே பிறக்காமல் இருக்கும் ஒரே நகரம் எது தெரியுமா, அதுதான் வாடிகன் (Vatican City) . இந்த நகரமானது இத்தாலியின் (Italy) மத்தியில் உள்ள ரோமில் அமைந்துள்ளது. இந்த நகரமானது முழுக்க கிறிஸ்தவ மதத்தின் மையப்பகுதியாக் கூறப்படுகிறது. இந்த நகரமானது ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தாய் வீடாகப் பார்க்கப்படுகிறது. இந்த பழமையான நகரமானது முஸ்லீம் மதத்தினருக்கு மெக்கா எப்படியோ, அதுபோல் ரோம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இரவும் கிறிஸ்தவத்தின் புனித இடமாகக் கூறப்படுகிறது.
இந்த இடமானது சுமார் 1929ம் ஆண்டில் இருந்து முழுக்க ரோம் கிறிஸ்தவ பாதிரியார்கள் வாழும் நகரமாக இருந்து வருகிறது. இந்த வாடிகன் நகரின் சுமார் 96 ஆண்டுகளாக எந்த ஒரு குழந்தைகளும் பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த நகரமானது பல லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தாயகம் :
இந்த வாடிகன் நகரமானது போப் முதல் திருச்சபையின் முக்கிய பாதிரியார்களின் தயக்கமாக இருக்கிறது. இந்த வாடிகன் நகரத்தில் முக்கிய பாதிரியார்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த நகரத்தில் மருத்துவமனை கூட கிடையாதாம். அந்த நகரத்தில் மருத்துவமனை கட்டாயமாக வேண்டும் எனப் பல கோரிக்கைகளும், வேண்டுதல்களும் கேட்கப்பட்ட நிலையிலும். அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான நகரமானது இத்தாலி நாட்டின் மையப்பகுதியில் உள்ள ரோமில் அமைந்துள்ளது.
மருத்துவமனை அமைக்கப்படத்தின் காரணம் இதுதானா ?
இந்த வாடிகன் நகரத்தில் மருத்துவமனை அமைக்கப்படாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று இந்த நகரமானது மிகச் சிறியதாக இருக்கும் நிலையில், இதற்குள் மருத்துவமனை வந்தால் நன்றாக இருக்காது என்றும், இந்த சிறிய நகரத்தில் மருத்துவமனை வந்தால் கண்டிப்பாக அசுத்தமாகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இந்த வாடிகன் நகரில் எந்த மருத்துவமனைகளையும் அமைக்க விடவில்லை என்றும் கூறப்படுகிறது.
வாடிகன் நகரின் மக்கள் தொகை :
இந்த நகரமானது வெறும் .49 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளாக்கவும், இந்த இந்த நகரத்தில் 1000-க்கும் குறைவான மனிதர்கள் மட்டுமே வாழ்கின்றனர். இந்த இடத்திற்குப் பல சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இடத்திற்கு வெறும் ரயில் சேவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறதாம்.