Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசியாவில் குறைந்த விலையில் பயணிக்கக்கூடிய விமானம் எது தெரியுமா?

இது குறைந்த விலையில் பயணிக்கக்கூடிய (Travel) விமானங்களின் வருங்காலங்களில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பட்ஜெட் விமானங்கள் தங்கள் சேவை மற்றும் நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல் மலிவு கட்டணங்களை வழங்குவதன் மூலம் விமானத் துறையை லாபகரமானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவில் குறைந்த விலையில் பயணிக்கக்கூடிய விமானம் எது தெரியுமா?
விமானம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Mar 2025 05:14 AM

கடந்த 2024 ஆம் ஆண்டின் குறைந்த விலையில் பயணிக்கக் கூடிய விமானங்களில் (Flight) உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது ஏர் ஏசியா (Air Asia) விமானம். இந்த நிறுவனத்தின் விமானப் பயணம் கடந்த ஆண்டு முன்னெப்போதையும் விட மக்கள் அதிகமாக பயணித்த விமானம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இது குறைந்த விலையில் பயணிக்கக்கூடிய (Travel) விமானங்களின் வருங்காலங்களில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பட்ஜெட் விமானங்கள் தங்கள் சேவை மற்றும் நம்பகத்தன்மையில் சமரசம் செய்யாமல் மலிவு கட்டணங்களை வழங்குவதன் மூலம் விமானத் துறையை லாபகரமானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த குறைந்த விலையில் பயணிக்கக் கூடிய விமானம்

ஏர் ஏசியா விமானத்தின் அளவு மற்றும் பயணம் செய்யும் இலக்குகளின் அடிப்படையில் ஏர் ஆசியா மலேசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் ஆசியாவின் ‘மிக குறைந்த விலையில் பயணிகள் பயணம் செய்யும் விமான நிறுவனம்’ என்ற பெருமையையும் அது பெற்றிருக்கிறது. மலேசிய தொழிலதிபரான டான் ஸ்ரீ அந்தோணி பிரான்சிஸ் ‘டோனி’ பெர்னாண்டஸ், ஒரு அரசுடன் இணைந்து செயல்பட்ட ஏர் ஆசியா நிறுவனத்தை கடந்த 2001 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார். மேலும் “இப்போது அனைவராலும் பறக்க முடியும்” என்ற வாசகத்துடன் விமான சேவையை அவர் தொடங்கினார்.

ஏர் ஆசியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள், 24 நாடுகளில் 120 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குகின்றன. ஏர் ஆசியாவின் நிறுவனத்தில் உள்ள பெரும்பாலானோர் ஆர்வமுள்ள இளம் மேலாளர்களாக இருப்பது அதன் வளர்ச்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஏர் ஆசியாவின் விரைவான வளர்ச்சி இப்போது நிர்வாகத்திலும் வழிநடத்துவதிலும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

டோனி பெர்னாண்டஸ் ஏர் ஆசியாவை உலகின் சிறந்த குறைந்த விலை விமான நிறுவனமாக மாற்றியிருக்கிறார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக ‘உலகின் சிறந்த குறைந்த விலை’ விமான நிறுவன ஸ்கைட்ராக்ஸ் விருதைப் பெற்ற பெருமைக்குரியவராக மாறியிருக்கிறார். ஏர் ஆசியாவின் விரைவான வளர்ச்சி பணியாளர்களின் வளர்ச்சிக்கு போதுமான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. செயல்பாட்டு ரீதியாக, நிறுவனம் ஒப்பீட்டளவில் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. இருப்பினும், ஏர் ஆசியா குழுமத்தின் பல்வேறு டீம்களுக்கு இடையே உண்மையான பிணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டியவை:

ஏர் ஏசியா போன்ற நிறுவனங்கள் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இந்திய விமான சேவைகள், குறிப்பாக ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஃபர்ஸ்ட் ஆகியவை சேவை தரத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஏர் ஏசியா நிறுவனம் நிர்வாகத்தில் மிகுந்த கவனத்தை செலுத்துகிறது. இந்திய விமான நிறுவனங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஏர் ஏசியா குறைந்த கட்டணத்தில் மிகச் சிறந்த சேவையை வழங்குகிறது. இந்திய விமான நிறுவனங்கள் இதை முன்னோக்கி செயல்பட வேண்டும்.ஏர் ஏசியா பல நாடுகளில் பரவலாக சேவைகளை வழங்குகிறது. இந்திய நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் மேலும் வளர வேண்டும். அப்போது தான் அதன் தரமும் மேம்படும் என பலரது கருத்தாக இருக்கிறது.

'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!...