உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?.. அப்போ இவற்றை கவனியுங்கள்!

Slow internet in Smartphone | பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றுதான் இந்த Slow Internet. பலரும் இது இணைய சேவையில் உள்ள சிக்கல் என நினைக்கின்றனர். ஆனலா, எல்லா நேரத்திலும் அதற்கு இணைய சேவை சிக்கல் காரணமாக இருக்காது. மாறாக ஸ்மார்ட்போன்களில் உள்ள சில சிக்கல்களும் இதற்கு காரணமாக அமையலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?.. அப்போ இவற்றை கவனியுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Apr 2025 11:14 AM

பொதுமக்களின் வாழ்வில் இணைய சேவை (Internet Service) இன்றியமையாததாக மாறிவிட்டது. காரணம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் ஸ்மார்ட்பொன்களை (Smartphone) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன்களை சீராக பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இணைய சேவை கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பாலான நேரங்களின் இணைய சேவையில் சில சிக்கல்கள் ஏற்படும். உதாரணமாக ஏதேனும் இணையதளத்தையோ அல்லது செயலியையோ பயன்படுத்தும்போது மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்கு இணைய சேவை தான் காரணம் என பலர் நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், எல்லா நேரங்களிலும் இந்த சிக்கலுக்கு இணைய சேவை காரணமாக இருக்காது. மாறாக உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள சில்ல அமைப்புகளும் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிலையில், எந்த எந்த காரணங்களால் உங்கள் ஸ்மார்ட்போனில் இணைய சேவை மெதுவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Browser தரவுகள்

நீங்கள் பயன்படுத்தும் தேடுபொறிக்கள் அதிக அளவிலான தகவல்களை சேமித்து வைக்கும். உதாரணமாக இணையதள தகவல்கள் (Browser Date), கேட்ச் (Catche),  குக்கீஸ் (Cookies) உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்திருக்கும். சில சமயங்களில் இவை உங்கள் ஸ்மார்ட்போன்களின் இணைய சேவையை முழுமையாக பயன்படுத்த தடையாக இருக்கும். குறிப்பாக நீங்கள் இணையதளங்களை பயன்படுத்தும்போது மெதுவான செயல்பாட்டையே உங்களால் பெற முடியும்.

சரிசெய்வது எப்படி?

  1. நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குரோம் செயலிக்கு சென்று மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  2. பிறகு Settings-ஐ கிளிக் செய்து.
  3. அதனை தொடர்ந்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள Site Setting என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு Storage என்பதை கிளிக் செய்து Clear Data என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் குரோமில் உள்ள தேவையற்ற தகவல்கள் மொத்தமாக நீங்கிவிடும். இதன் மூலம் நீங்கள் தடையின்றி குரோம் செயலியை பயன்படுத்தலாம்.

Chrome Sync அம்சத்தை நிறுத்தி வையுங்கள்

Chrome Sync உங்களது தரவுகள், கடவுச்சொல் உள்ளிட்டவற்றை சேகரித்து வைக்கும். இது பயனுள்ளதாக இருந்தாலும், இதன் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்படும். அது உங்கள் குரோம் செயலியின் செயல் திறனை வெகுவாக பாதிக்கும். எனவே, அதனை நிறுத்தி வைப்பது குரோம் செயலியை தடையில்லாமல் பயன்படுத்த உதவி செய்யும்.

Chrome Sync அம்சத்தை நிறுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் குரோம் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதற்கு பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு Sync ஆப்ஷனை தேர்வு செய்து அந்த அம்சத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற தரவுகள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்படும். இதன் மூலம் உங்கள் குரோம் சீராக செயல்படும்.