பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பரபரப்பு!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்
பாகிஸ்தான், ஏப்ரல் 26: மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் மீதான நடவடிக்கை தொடரும் எனவும் பலூச் விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டுக்குள்ளே தீவிரவாத அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவம் மீது அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 25ஆம் தேதி மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டிவெடிப்பு தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குவெட்டாவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மார்கட் சௌகியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தடுப்பில் மோதியதை அடுத்து, குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுபேதார் ஷெஹ்சாத் அமீன், நைப் சுபேதார் அப்பாஸ், சிபாய் கலீல், சிபாய் ஜாஹித், சிபாய் குர்ராம் சலீம் உள்ளிட்டோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றது.
இதுகுறித்து பலூச் விடுதலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவெட்டாவின் புறநகர்ப் பகுதியான மார்கட்டில், பலூச் விடுதலை அமைப்பு இராணுவ வாகனம் மீது குண்டு வெடிப்பு தாக்குல் நடத்தியது. இந்த நடவடிக்கையில், ஒரு எதிரி வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பரபரப்பு
Baloch Liberation Army freedom fighters targeted a convoy of occupying Pakistani Army in a remote-controlled IED attack in Margat, a suburb of Quetta. In this operation, an enemy vehicle was completely destroyed and all 10 personnel on board were eliminated: Baloch Liberation… pic.twitter.com/iaF9gjpiEw
— IANS (@ians_india) April 25, 2025
அதில் இருந்த 10 ராணுவ வீரர்கள் கொல்லப்ப்ட்டனர். இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை பலூச் விடுதலை இராணுவம் ஏற்றுக்கொள்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மீதான நடவடிக்கை தொடரும்” என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள பலுசிஸ்தானில் அண்மை காலமாக வன்முறை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலூச் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளுக்கு தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வருகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் கூட, 400 பயணிகளுடன் சென்ற ரயிலை பலூச் விடுதலை ராணுவம் வெடி பொருட்களை வைத்ததால், ரயில் தடம் புரண்டது.
மேலும், அந்த ரயிலையே பலூச் விடுதலை ராணுவம் கடத்தியது. குவெட்டாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே ரயிலை கடத்தினர். அதன்பிறகு, பயணிகளை விடுவித்தனர்.