Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிக்கலில் அமெரிக்கா – ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை?

எல்லாவற்றிற்கும் தீர்வு காண்பதிலிருந்தும், அனைத்து விவகாரங்களிலும் உடன்படுவதிலிருந்தும் வெகு தூரம் இருக்கிறோம். ஆனால் இந்த வகையான கலந்துரையாடல் மிகவும் அவசியமானதாகிறது. நாங்கள் இதை தொடரப்போகிறோம், மேலும், ஐக்கிய நாடுகள் மற்றும் சில நாடுகளை இதில் இணைக்க உள்ளோம்," என்றார்.

சிக்கலில் அமெரிக்கா – ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை?
உக்ரைன்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Mar 2025 05:09 AM

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் (Ukraine) இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரின் காரணமாக இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றன. இதனையடுத்து மார்ச் 2025ல், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை

என்டிடிவியின் செய்தியின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் பிரதிநிதி கிரிகோரி காராசின் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பிற நாடுகளையும் இணைக்கவுள்ளோம். நாங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம். பல பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அது மிகவும் கடுமையான உரையாடலாக இருந்தது. எளிதாக இல்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்களுக்கும் அமெரிக்காவுக்கும் பயனுள்ளதாக இருந்தது,” என செய்தி தொடர்பாளர் கிரிகோரி கராசின் தெரிவித்தார்.

மேலும், எல்லாவற்றிற்கும் தீர்வு காண்பதிலிருந்தும், அனைத்து விவகாரங்களிலும் உடன்படுவதிலிருந்தும் வெகு தூரம் இருக்கிறோம். ஆனால் இந்த வகையான கலந்துரையாடல் மிகவும் அவசியமானதாகிறது. நாங்கள் இதை தொடரப்போகிறோம், மேலும், ஐக்கிய நாடுகள் மற்றும் சில நாடுகளை இதில் இணைக்க உள்ளோம்,” என்றார். மேலும் மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் போரை விரைவில் முடிக்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார் எனவும் சவுதி அரேபியாவில் நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தை பெரிய முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்

உக்ரைன் பேச்சுவார்த்தை குழு இன்னும் ஒரு நாள் ரியாதில் தங்கி, அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க இருக்கிறது. மேலும், ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் படி, இரண்டாவது சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும் இது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்

ஒரு பக்கம் ரஷ்யா – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க, உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்கள் இரவு முழுவதும் தொடர்ந்தன. 99 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதல்களால் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகரான கீவ் என்ற பகுதியை நோக்கி ரஷ்யா நேற்று சரமாரியாக டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 5 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல்களாக பார்க்கப்படுகின்றன. இதற்கிடையில் ​ஜெர்மனி அரசு, உக்ரைனுக்கு ரூ. 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உதவியில் டிரோன்கள், கவச உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் அடங்கும். ரஷ்யா-உக்ரைன் போரின் போதான உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்த இது முக்கியமாக பயன்படும்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...