ஏலம் விடப்படும் அரிய வகை கோல்கொண்டா ப்ளூ வைரம் – இவ்வளவு விலையா?

Golconda Blue Diamond: இந்தியாவின் அரிய வகை வைரமாக கருதப்படும் கோல்கொண்டா ப்ளூ வைரம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஏலம் விடப்படவுள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வைரம் குறித்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஏலம் விடப்படும் அரிய வகை கோல்கொண்டா ப்ளூ வைரம் - இவ்வளவு விலையா?

கோல்கொண்டா ப்ளூ வைரம்

Published: 

14 Apr 2025 19:34 PM

இந்தூர் (Indore), பரோடா ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களிடம் இருந்த அரிய வகை நீல வைரமான கோல்கொண்டா ப்ளூ என்ற வைரம் (Golconda Blue Diamond) தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரமானது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் கிறிஸ்டி நிறுவனத்தின் மேக்னிஃபிசன்ட் ஜுவல்ஸ் ஆல் வருகிற மே 14 ஆம் தேதி ஏலம் விடப்படவிருக்கிறது. இந்த வைரமானது 23.24 கேரட் எடை கொண்டது எனவும் பாரசீய நகை வடிவமைப்பாளர் ஜார் என்பவரால் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ35 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.300 கோடி முதல் 430 கோடி வரை இருக்கும். கோல்கொண்டா ப்ளூ போன்ற அரிய வகை ப்ளூ வைரங்கள் மிக அரிதாகவே ஏலம் விடப்படுகின்றன. இந்த வைரத்தை ஏலத்தில் எடுக்க உலக அளவில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கோல்கொண்டா ப்ளு வைரம் போன்ற அரிய வகை வைரங்கள் உலக அளவில் மிக குறைவான அளவிலேயே இருக்கின்றன. இதன் காரணமாகவே இதன் விலை கோடிக்கணக்கில் விற்கப்படுகிறது. பலருக்கு இதுபோன்ற வைரங்களை வைத்திருப்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது செல்வத்தின் குறியீடாக மதிக்கப்படுகிறது.

இந்த ப்ளூ வைரத்தின் சிறப்புகள்

இந்த வைரம் தெலங்கானா மாநிலம், கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது. இந்த கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து உலகின் மிகப்பெரிய வைரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவை கோஹினூர் வைரங்களுக்கு நிகரானதாக கூறப்படுகிறது. இந்த வைரங்கள் இந்தியாவின் பெருமைக்குரியதாக மதிக்கப்படுகிறது.  இந்த வைரத்தை இந்தூர் மன்னர் இரண்டாவது யேஷ்வந்தராவ் ஹோல்கர் பாதுகாத்து வந்திருக்கிறார்.  கடந்த 1923 ஆம் ஆண்டு பிரஞ்சு நகை வடிவமைப்பாளர் ஷோமேட் இந்த வைரக் கல்லை ஒரு ப்ரேஸ்லெட்டாக வடிவமைத்தார். மேலும் மன்னர் யேஷ்வந்தர் ராவ்  மேலும் இரண்டு கோல்கொண்டா வைரங்களை வாங்கியிருந்தார்.

இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் வைரம்

கடந்த 1947 ஆம் ஆண்டு, இந்த வைரக் கல் அமெரிக்காவுக்கு சென்றது அங்கு நகை வடிவமைப்பாளர் ஹாரி வின்ஸ்டன் அதை வாங்கி, ஒரு  அலங்கார நகையாக வடிவமைத்தார். பின்னர், இந்தக் கல் இந்திய பாரோடா மன்னர் குடும்பத்திற்கு சென்று, பிறகு அவர்களது தனிப்பட்ட அடையாளமாக மாறியது.

இந்த கோல்கொண்டா ப்ளூ வைரம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான பொக்கிஷமாக உள்ளது. இது உலகின் மிகச் சிறந்த மற்றும் அரிதான வைரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இதன் பாரம்பரியம் மற்றும் மகத்துவம் காரணமாக இந்திய மக்கள் இதனை பொக்கிஷமாக கருதுகின்றனர். இந்தக் கல் பார்வையில் எளிமையாக தெரிந்தாலும், அதன் உண்மையான மதிப்பு அதன் வரலாறு ஆகியவை இதன் மதிப்பை உயர்த்துகிறது. இந்தக் கல், மிக அரிதானது, அதன் நிறமும் அளவிலும் அசாதாரணமானது. அதன் அழகும், உறுதித் தன்மையின் காரணமாக இந்த வைரக் கல் இந்திய கலாச்சாரத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளது.