அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

Powerful Earthquake Hits San Diego in America | கடந்த சில நாட்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

பூங்காவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

Updated On: 

15 Apr 2025 08:56 AM

 IST

அமெரிக்கா, ஏப்ரல் 15 : மியான்மர் (Myanmar) மற்றும் தாய்லாந்தை (Thailand) தொடர்ந்து இன்று (ஏப்ரல் 15, 2025) அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ (San Diego) நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் கடும் பீதியில் உரைந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் எந்த அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டு வருகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து ஏப்ரல் 13, 2025 அன்று இந்தியாவின் இமாச்சல பிரதேசத்திலும் மற்றும் தஜிகிஸ்தான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, நிலநடுக்கம் காரணமாக ஏற்கனவே கடும் பாதிப்புகளை சந்தித்து இருந்த மியான்மரிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கங்கள் குறைவான அளவில் பதிவு செய்யப்பட்ட நிலையில் எந்த வித சேதமும் பதிவு செய்யப்படவில்லை.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.2 ரிக்டராக பதிவு செய்யப்பட்ட நிலையில், சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சான் டியாகோ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எந்த வித பெரிய சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மியான்மரை வாட்டி வதைக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் மார்ச் 28, 2025  அன்று மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 7.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு உயிர் பலி எண்ணிக்கை சுமார் 3,000 கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது
23 ஆண்டுகள் நீண்ட திருமணம்.. வெள்ளை பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த சம்பவம்..
செல்ஃபி எடுக்க முயன்று 130 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
அமெரிக்காவில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் - இந்திய வம்சாவளி இளைஞர் கைது