Pope Francis’s State Funeral: போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் முர்மு..! மரியாதை செய்ய குவிந்த உலக தலைவர்கள்!

President Droupadi Murmu's Tribute: போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26, 2025 அன்று வத்திக்கானில் நடைபெற்றது. உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் அஞ்சலி செலுத்தினார். போப் பிரான்சிஸ் நீண்டகால நோயால் மறைந்தார். இந்தியா தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டித்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

Pope Franciss State Funeral: போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் முர்மு..! மரியாதை செய்ய குவிந்த உலக தலைவர்கள்!

குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

Published: 

26 Apr 2025 14:51 PM

வத்திக்கான், ஏப்ரல் 26: போப் பிரான்சிஸின் (Pope Francis) இறுதிச் சடங்கு இன்று அதாவது 2025 ஏப்ரல் 26ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு) வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் முன் உள்ள பரோக் பிளாசாவில் தொடங்கியது. இந்த நிகழ்வில் பல உலக தலைவர்கள் போப் பிரான்சிஸின் கௌரவிக்க கலந்துகொண்டுள்ளனர். அதேபோல், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) வத்திக்கான் நகரம் வந்துள்ளார். இந்திய மத்திய அரசு துக்கத்தின் அடையாளமாக இன்று (22.04.2025) இந்திய தேசியக் கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டுள்ளது.

போப் பிரான்ஸ் இறுதிச்சடங்கு:

வத்திக்கான் வெளியிட்ட தகவலின்படி, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் 130 வெளிநாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 10 நாட்டினுடைய தலைவர்களும், 10 மன்னர்களும் அடங்குவர். அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டன் இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டுள்ளனர்.

போப் பிரான்சிஸ் காலமானார்:

போப் பிரான்சிஸ் 2025 ஏப்ரல் 21ம் தேதி மறைந்தார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், வாழ்வின் கடைசி நாட்களில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்தது. பல நாட்கள் வெண்டிலேட்டரிலும் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 88 வயதில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸின் உண்மையான பெயர் ஜார்ஜ் மரியா பெர்கோலியா, இவர் கடந்த 2013ம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசு தலைவர் மரியாதை:

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக வத்திக்கான் நகருக்கு சென்றுள்ளார். நேற்று (26.04.2025) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வத்திக்கானை சென்று அடைந்து, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மறைந்த போப்பிற்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி இரங்கல்:

போப் பிரான்சிஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், மனத்தாழ்மை, இரக்கம் மற்றும் ஆன்மீக துணிச்சலின் அடையாளமாக மில்லியன் கணக்கான மக்கள் போப்பை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.