போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி!
Pope Francis Funeral | கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21, 2025 அன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று (ஏப்ரல் 26, 2025) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்
வத்திக்கான், ஏப்ரல் 26 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) ஏப்ரல் 21, 2025 அன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று (ஏப்ரல் 26, 2025) நல்லடக்கம் (Funeral) செய்யப்படுகிறது. அவரது உடல் 5 நாட்கள் பொதுமக்கள் மற்றும் ஆயர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை போப் பிரான்சிஸின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.
உடல்நல குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக 2013 ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் தான் போப் பிரான்சிஸ். இவர் சுமார் 12 ஆண்டுகளாக கத்தோலி திருச்சபையின் தலைவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகிய போப் பிரான்சிஸ், 38 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து உடல் நலம் முன்னேறிய நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஈஸ்டர் திருநாளின் மறுநாளான ஏப்ரல் 21, 2025 அன்று அவர் உயிரிழந்ததாக வத்திக்கான் (Vatican) அறிவித்தது.
போப் பிரான்சிஸ் மறைவை அறிவித்த வத்திக்கான்
Pope Francis died on Easter Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican’s Casa Santa Marta. pic.twitter.com/jUIkbplVi2
— Vatican News (@VaticanNews) April 21, 2025
சவப்பெட்டியில் வைக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்
போப் பிரான்சிஸின் உடல் கடந்த 3 நாட்களாக காசா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26, 2025) இந்திய நேரப்படி அவரது உடலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ்
The Rite of the closing of the coffin of His Holiness Pope Francis pic.twitter.com/8hBhmF3d8d
— Catholic Sat (@CatholicSat) April 25, 2025
முன்னதாக போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதி சடங்கிலும் இந்தியா சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அரை கம்பத்தில் தேசிய கொடிகளை பறக்க விட அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.