Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி!

Pope Francis Funeral | கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21, 2025 அன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று (ஏப்ரல் 26, 2025) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி!
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 26 Apr 2025 07:25 AM

வத்திக்கான், ஏப்ரல் 26 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) ஏப்ரல் 21, 2025 அன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று (ஏப்ரல் 26, 2025) நல்லடக்கம் (Funeral) செய்யப்படுகிறது. அவரது உடல் 5 நாட்கள் பொதுமக்கள் மற்றும் ஆயர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை போப் பிரான்சிஸின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.

உடல்நல குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக 2013 ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் தான் போப் பிரான்சிஸ். இவர் சுமார் 12 ஆண்டுகளாக கத்தோலி திருச்சபையின் தலைவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகிய போப் பிரான்சிஸ், 38 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து உடல் நலம் முன்னேறிய நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஈஸ்டர் திருநாளின் மறுநாளான ஏப்ரல் 21, 2025 அன்று அவர் உயிரிழந்ததாக வத்திக்கான் (Vatican) அறிவித்தது.

போப் பிரான்சிஸ் மறைவை அறிவித்த வத்திக்கான்

சவப்பெட்டியில் வைக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்

போப் பிரான்சிஸின் உடல் கடந்த 3 நாட்களாக காசா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26, 2025) இந்திய நேரப்படி அவரது உடலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ்

முன்னதாக போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதி சடங்கிலும் இந்தியா சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அரை கம்பத்தில் தேசிய கொடிகளை பறக்க விட அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்...
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?...
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?...
நாயை இரண்டாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொன்ற மருத்துவர்...
நாயை இரண்டாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொன்ற மருத்துவர்......
மதுரை மக்களுக்கு உற்சாக அறிவிப்பு.. இப்படி மாறும் டெம்பிள் சிட்டி
மதுரை மக்களுக்கு உற்சாக அறிவிப்பு.. இப்படி மாறும் டெம்பிள் சிட்டி...
விஜய் வருகை... கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!
விஜய் வருகை... கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!...
பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!...
தமிழகத்தில் மீண்டும் வருகிறதா தாலிக்கு தங்கம் திட்டம்..?
தமிழகத்தில் மீண்டும் வருகிறதா தாலிக்கு தங்கம் திட்டம்..?...
திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்...
திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்......
கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும் - ரஜினிகாந்த்!
கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும் - ரஜினிகாந்த்!...
நேஷ்னல் ஹரால்டு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நேஷ்னல் ஹரால்டு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு!...