போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானார் காலமானார்.. அடுத்த போப் யார்?
Pope Francis Died at the age of 88 | கத்தோலிக்க திருச்சபையின் 226 வது திருத்தந்தையாக பதவி வகித்து வந்தவர் போப் பிரான்சிஸ். இவர் கடந்த 13 ஆண்டுகளாக திருத்தந்தை பொறுப்பில் இருந்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21, 2025) உடல்நல குறைவால் காலமானார்.

போப் பிரான்சிஸ்
வத்திக்கான், ஏப்ரல் 21 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) இன்று (ஏப்ரல் 21, 2025) காலமான நிலையில், அடுத்த போப் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த நிலையில், தற்போது அவரின் மறைவை தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கட்டாயம் எழுந்துள்ளது. இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் ஆக யார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது, போப் பதவிக்காக தகுதியுள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உடல்நல குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உடல்நல குறைவால் தனது 88வது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போப் பிரான்சிஸ் 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்த பிறகு வீடு திரும்பினார். அதன் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று (ஏப்ரல் 21, 2025) காலை காலமானதாக வத்திக்கான் அறிவித்தது. போப்பின் மறைவால் அடுத்து போப் ஆக பதவி ஏற்க உள்ளது யார் என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த போப் யார் – வேட்பாளர்கள் இவர்கள் தான்
- லூயிஸ் டேகில் – லூயில் டேகில் (Luis Tagle) 67 வயதாகும் இவர் போப் பிரான்சிஸின் குணத்தை கொண்டவர்.
- அம்போங்கோ பெசுங்கு – அம்போங்கோ பெசுங்கு (Ambongo Besungu) 65 வயதாகும் இவர், போப் வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு மறைந்த போப் பிரான்சிஸ்க்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
- பியட்ரோ பரோலின் – பியட்ரோ பரோலின் (Pietro Parolin) 70 வயதாகும் இவர் வத்திக்கானின் செயலாளராக உள்ளார்.
- விம் எய்ஜ்க் – விம் எய்ஜ்க் (Wim Eijk) 71 வயதாகும் இவர் கர்தினாலாக உள்ளார். இவரும் போப் வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார்.
- ரேமண்ட் புர்க் – ரேமண்ட் புர்க் (Raymond Burke) 76 வயதாகும் இவர், கர்தினாலாக உள்ளார் . இவரும் போப் வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார்.
போப் வேட்பாளர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
போப் பிரான்சிஸ் மறைவுக்காக வத்திகானில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடலை காண உலகம் முழுவதும் உள்ள 252 கர்தினால்களும் வருகை புரிவர். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் 3-ல் 2 பங்கு வாக்குகளை பெரும் கர்தினால் அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார். அதாவது மொத்தம் உள்ள 252 கர்தினால்களில் 115 பேர் ஒருவருக்கு வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.