88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ்.. வத்திக்கான் அறிவிப்பு!

Pope Francis Died at the Age of 88 | கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தை போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21, 2025) காலை உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ்.. வத்திக்கான் அறிவிப்பு!

போப் பிரான்சிஸ்

Updated On: 

21 Apr 2025 14:26 PM

வத்திக்கான், ஏப்ரல் 21 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21, 2025) காலை 7.33 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டதாக வத்திக்கான் (Vatican) அறிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 20, 2025) உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், வத்திகானில் (வாடிகன் நகரம்) போப் பிரான்சிஸ் பொதுமக்களை சந்தித்தார். இந்த நிலையில்,  இன்று காலை அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தை போப் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபை விரிவடைந்துள்ளது. இந்த திருச்சபையின் தலைமை இடம் வத்திகான் நகரத்தில் உள்ளது. வத்திக்கான் நகரத்தில் தான் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் இருப்பார். அவ்வாறு 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தான் போப் பிரான்சிஸ். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தை ஆவார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதற்கு பிறகு அவரது உடனநிலை சீராக இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

போப் பிரான்சிஸ்சின் மறைவை அறிவித்த வத்திக்கான்

ஈஸ்டர் தினத்தில் மக்களுக்கு ஆசி வழங்கிய போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராகி ஓய்வு எடுத்து வந்த நிலையில், ஈஸ்டரை முன்னிட்டு பொதுமக்களை சந்தித்து ஆசி வழங்கினார். இந்த நிலையில் இன்று வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது. பிப்ரவரி 14, 2025 அன்று உடல்நல குறைபாடு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போப், 38 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்.

பொதுமக்களை சந்தித்த போப் பிரான்சிஸ்

 

2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். உலகில் நிலவும் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி நிலவ வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.