130 அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காக தயாராக உள்ளன.. மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்!
Pakistan Minister Threatens India with 130 Nuclear Weapons | பஹல்காம் தாக்குதலை தொடந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் அணு ஆயுத கிடங்கு உள்ளதாகவும் அதில் உள்ள 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை இலக்காக கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஏப்ரல் 27 : இந்தியா மீது வீச 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் (Pakistan) அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா குறித்து பாகிற்தான் அமைச்சர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – 23 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பஹல்காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த 26 சுற்றுலா பயணிகளில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடங்குவர். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரல் தாக்குதல் உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இந்தியா கடும் கோபம் அடைந்தது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) என்ற அமைப்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர்கள், பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புடையதாக இந்தியா கூறி வரும் நிலையில் அதற்கான ஆதாரம் இருந்தால் உலகிற்கு காட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் தாங்கள் தற்காப்புக்காகவே முப்படைகளுடன் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
“Pakistan’s nuclear missiles are not for decoration. They have been made for India,” threatens Railway Minister Muhammad Hanif Abbasi pic.twitter.com/UqCCRmpXx6
— Shashank Mattoo (@MattooShashank) April 27, 2025
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா மீது அணு ஆயுத தாக்குத்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர் சிந்து நதிரை இந்தியா நிறுத்தி வைத்ததால் முழுநேர போருக்கு தயாராகி வருவதாக அர்த்தம். இந்தியாவிற்கு என்று தனியாக ஆயுத கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி ஏவுகணைகள் உள்ளன. 130 ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை இலக்காக வைத்துள்ளது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.