சிம்லா ஒப்பந்தம் ரத்து.. இந்தியாவுடன் போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்?
Pakistan Government Cancelled Shimla Agreement | ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதன்படி, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான், ஏப்ரல் 24 : 1972 ஆம் ஆண்டு இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை (Shimla Agreement) ரத்து செய்வதாக பாகிஸ்தான் அரசு (Pakistan Government) அறிவித்துள்ளது. சிந்து நதி (Indus River) ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து, சிந்து நதிநீரை நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுடன், பாகிஸ்தான் போருக்கு தயாராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன, அது ரத்து செய்யப்படுவதன் மூலம் இந்திய அரசுக்கு என்ன என்ன சவால்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகையே உலுக்கிய ஜம்மு & காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 27 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது உலகையே உலுக்கிய நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
சிம்லா ஒப்பந்தம் ரத்து – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
#BreakingNews: Pakistan’s pathetic retaliation#Pakistan pulls out of all bilateral deals with #India, including Shimla Agreement #PahalgamTerroristAttack | @pareektweets pic.twitter.com/l07GLFEZuS
— Mirror Now (@MirrorNow) April 24, 2025
சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன – அதன் முக்கியத்துவம் என்ன?
பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்றுக்கொண்டு இருந்த சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்லா ஒப்பந்தத்தை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. 1972 போரை நிறுத்தும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடயே கையெழுத்தான ஒப்பந்தம் தான் சிம்லா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லை பிரச்னையை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாகிஸ்தான் அரசு இந்த ஒப்பந்ததத்தை ரத்து செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.