Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பத்து வருடக் கனவு கார்… ஒரு மணி நேரத்தில் சாம்பல் – ஜப்பானியருக்கு நேர்ந்த சோகம்

Japanese Man's Ferrari Dream: விலையுயர்ந்த கார் வாங்குவது அனைவரின் கனவு. இதற்காக, வசதி படைத்தவர்கள் எந்தத் தொகையையும் செலவிடத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு எளிமையான மனிதர் பத்து வருட காத்திருப்புக்கு பிறகு தனது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் தனது கனவு காரை வாங்கிய அடுத்த ஒரு மணி நேரத்தில் சாம்பலாக மாறினால் என்ன செய்வது? இந்த சம்பவம் ஜப்பானில் ஒருவருக்கு நடந்திருக்கிறது.

பத்து வருடக் கனவு கார்… ஒரு மணி நேரத்தில் சாம்பல் – ஜப்பானியருக்கு நேர்ந்த சோகம்
எரிந்து சாம்பலான ஃபெராரி கார்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Apr 2025 23:53 PM

ஜப்பானை (Japan) சேர்ந்த இசைக் கலைஞர் என்ற ஹொங்கான் என்பவர், தன்னுடைய கனவு காரான ஃபெராரி 458 ஸ்பைடர் காரை (Ferrari) வாங்க பத்து ஆண்டுகளாக சேமித்து வந்தார். இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி மதிப்புள்ள இந்த ஃபெராரி காரை அவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வாங்கினார். ஆனால், கார் வாங்கிய வெறும் ஒரு மணி நேரத்துக்குள் கார் தீப்பற்றி எரிந்தது. ஜப்பானின் ஷுடோ எக்ஸ்பிரஸ்வேயில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, காரில் நெருப்பு ஏற்பட்டதை அவர் கவனித்திருக்கிறார். உடனே காரை நிறுத்தி அதில் இறுந்து இறங்கினார். நல்ல வேலையாக ஹொங்கானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை 20 நிமிடங்களில் அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து விட்டது. காரின் பம்பர் மட்டும் தான் அவருக்கு எஞ்சியது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் பெராரி வாங்கும் கனவு கண்டேன். ஆனால் அந்த கனவு சில நிமிடங்களில் எரிந்து சாம்பலாகிவிட்டது என்று அவர் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருக்கிறார். விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவு. அதற்காக பெஹாங்கான் 10 ஆண்டு காலமாக கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த 10 ஆண்டுகளும் தனது தேவையில்லாத செலவுகளை தவிர்த்து அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை புறக்கணித்து ஒரு ஜென் மன நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வாங்கிய கார் ஒரு மணி நேரத்திற்குள் இப்படி ஒன்றுமில்லாமல் ஆவது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எரிந்து சாம்பலான ஃபெராரி கார்

 

ஹொங்ன்கான் தனது மனவேதனையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இது தொடர்பாக ஃபெராரியை சொந்தமாக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதாக அவர் எழுதினார். அது நனவான சில நிமிடங்களில் அந்தக் கனவு ஒரு கனவாக மாறியதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “டெலிவரி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எனது ஃபெராரி எரிந்து சாம்பலானது. ஜப்பான் முழுவதிலும் இதுபோன்ற பிரச்சனையை அனுபவித்த ஒரே நபர் நான்தான்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு மனிதர் தனது கனவான சிறிய படகை வாங்கி, கடலில் பயணித்திருக்கிறார். ஆனால் சில மணி நேரங்களில் அது மூழ்கியது. நல் வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம், புதிய யாட் வாங்கியவர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும் சம்பவங்களும் அவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.

சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!
சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!...
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!...
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?...
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!...
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!...
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?...
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...