Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காணாமல் போன இந்திய மாணவி.. கனடா கடற்கரையில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?

Indian Student Dead In Canada : இந்திய மாணவி கனடாவில் உள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஏப்ரல் 25ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் பஞ்சாபைச் சேர்ந்த வான்ஷிகா என்று தெரியவந்துள்ளது.

காணாமல் போன இந்திய மாணவி.. கனடா கடற்கரையில் சடலமாக மீட்பு..  நடந்தது என்ன?
உயிரிழந்த மாணவிImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Apr 2025 12:40 PM

கனடா, ஏப்ரல் 30 :  கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வான்ஷிகா காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள்  படிப்பதற்காக  வெளிநாடு செல்கின்றனர். அதோடு வேலைக்காகவும் வெளிநாடுகளில் தங்கி இருக்கின்றனர். ஆண்டுதோறும் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு  இந்தியாவில் இருந்து  மாணவர் சென்று படித்து வருகின்றனர்.

காணாமல் போன இந்திய மாணவி

அதே நேரத்தில் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அவ்வப்போது மர்மமான முறையில் உயிரிழந்தும் வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன சில நாட்களுக்கு பிறகு, அவரது சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். உயிரிழந்த மாணவி வான்ஷிகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்எல்ஏ குல்ஜித் சிங் ரந்தவாவின் நெருங்கிய உதவியாளருமான தேவிந்தர் சிங்கின் மகள் ஆவார்.

பஞ்சாபில் உள்ள தேரா பாசியைச் சேர்ந்த வான்ஷிகா.  பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, டிப்ளமோ படிப்பைத் தொடர இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 25ஆம் தேதி இவர் காணாமல் போகியுள்ளார். அதன்பிறகு, தற்போது அவரை கனடா கடற்கரையில் சடலமாக போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

நடந்தது என்ன?


ஊடக அறிக்கைகளின்படி, வான்ஷிகாவின் உடல் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இதனை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், வன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் தந்தை டேவிந்தர் கூறுகையில், “ஏப்ரல் 26 ஆம் தேதி காலை அவர் காணாமல் போனதாக எனக்கு ஒரு செய்தி வந்தது. ஏப்ரல் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த IELTS தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். இந்திய அரசாங்கம் கனேடிய அதிகாரிகளுடன் பேசி அவரது உடலை மீண்டும் கொண்டு வருவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன்” என்றார்.

சிம்புவின் STR51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
சிம்புவின் STR51 படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து...
கோடையில் குட் நியூஸ்! குறையப்போகும் வெயில்.. மழைக்கு வாய்ப்பு..!
கோடையில் குட் நியூஸ்! குறையப்போகும் வெயில்.. மழைக்கு வாய்ப்பு..!...
Google Pay வழங்கும் பெர்சனல் லோன் - பெறுவது எப்படி?
Google Pay வழங்கும் பெர்சனல் லோன் - பெறுவது எப்படி?...
வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்
வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்...
RO நீரை வேஸ்ட் செய்யாதீங்க! கோடையில் இப்படி யூஸ் பண்ணுங்க..!
RO நீரை வேஸ்ட் செய்யாதீங்க! கோடையில் இப்படி யூஸ் பண்ணுங்க..!...
குரு - சுக்கிரன் இடையே பெயர்ச்சி.. இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
குரு - சுக்கிரன் இடையே பெயர்ச்சி.. இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!...
கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்..
கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்.....
குருபெயர்ச்சி 2025 எப்போது?.. மேஷ ராசிக்கான பலன்கள் இதோ!
குருபெயர்ச்சி 2025 எப்போது?.. மேஷ ராசிக்கான பலன்கள் இதோ!...
இந்த ஃபீல்ட் விட்டே போகலாம்னு நினைச்சேன் - இயக்குநர் சுதா கொங்கரா
இந்த ஃபீல்ட் விட்டே போகலாம்னு நினைச்சேன் - இயக்குநர் சுதா கொங்கரா...
பாஜக - தவெக கூட்டணி? நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்!
பாஜக - தவெக கூட்டணி? நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்!...
திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?
திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை: ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும்?...