Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து? – அமெரிக்க ஐடி நிறுவனங்கள் எச்சரிக்கை

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசின் புதிய குடியேற்ற கொள்கைகள் குறித்தான அறிவிப்பு பிறகு இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஹெச் - 1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் இந்தியர்கள் அதிகம். இந்த நிலையில் டிரம்ப்பின் நடவடிக்கை இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து? – அமெரிக்க ஐடி நிறுவனங்கள் எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 24 Apr 2025 22:48 PM

அமெரிக்க (America) குடியுரிமை விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தீவிரமாக உள்ளார். மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் வெளியேற்றுவதிலும் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட, 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அவர்கள் கைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொருபுறம் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க இமிகிரேஷன் வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். விசா புதுப்பித்தலை அது மேலும் சிக்கலாக்கும் என்பதன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசின் புதிய குடியேற்ற கொள்கைகள் குறித்தான அறிவிப்பு பிறகு இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஹெச் – 1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் இந்தியர்கள் அதிகம். இந்த நிலையில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் எச்சரிக்கைவிடுத்திருக்கின்றனர்.

ஐடி நிறுவனங்களின் எச்சரிக்கையால் கவலையில் இந்தியர்கள்

இந்த நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்பைடையில் முக்கிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுவதையோ அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதையோ தவிர்க்குமாறு எச்தரித்து வருகின்றனர். ஏனெனில் அவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கவலை தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு தொழிலாளர்களை, குறிப்பாக இந்தியர்களை அதிகம் சார்ந்திருக்கும் அமெரிக்க ஐடி துறையில் ஹெச்-1பி விசா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விசா இந்தியர்களுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன. அவர்களைத் தொடர்ந்து சீனா மற்றும் கனடா நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகியவை இந்தியர்களுக்கு பணிகளை வழங்குகின்றன.

H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு?

அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைய மறுக்கப்படுவார்களோ என்ற கவலையில் இந்தியாவுக்குச் செல்லும் தங்கள் திட்டங்களை ரத்து செய்ததாக ஹெச் -1பி விசா வைத்திருக்கும் ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் கவலை தெரிவித்திரு்தார். மேலும் அவர் டிரம்ப் அரசின் பிறப்புரிமை சார்ந்த குடியுரிமை முடிவு குறித்து கவலை தெரிவித்தார். ஒருவேளை எதிர்காலத்தில் சட்டம் மாற்றப்பட்டால், குழந்தைகள் இந்தியராகவோ அல்லது அமெரிக்கராகவோ இல்லாமல் நாடற்றவர்களாக மாறக்கூடும் என தனது பயத்தை பதிவு செய்தார்.

டொனால்ட் டிரம்ப் கடுமையான விசா விதிமுறைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. சில பேர் இப்போது வெளியிடங்களுக்கு செல்லும் எல்லா நேரங்களிலும் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறுகிறார்.

பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!
பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!...
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?...
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?...
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்...
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?...
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!...
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!...
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!...
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்...
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!...
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்...