Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடுத்த 36 மணி நேரம்… இந்தியா எடுக்கும் நடவடிக்கை.. கதிகலங்கும் பாகிஸ்தான்!

India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அடுத்த 36 மணி நேரத்திற்கு இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில், இந்தியாவின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அடுத்த 36 மணி நேரம்… இந்தியா எடுக்கும் நடவடிக்கை.. கதிகலங்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அமைச்சர்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Apr 2025 09:29 AM

பாகிஸ்தான், ஏப்ரல் 30: அடுத்த 36 மணி நேரத்திற்கு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா (Pakistan India Conflict) திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எந்தவொரு தவறான செயலுக்கும் உறுதியான மற்றும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் எச்சரிச்சை விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத (Pahalgam Terror Attack) தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும், எல்லை பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல்

பஹல்காம் தாக்குதலை அடுத்து, கடந்த ஐந்து நாட்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மே முதல் வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்ததான் அமைச்சர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, அடுத்த 24-36 மணி நேரத்தில் இஸ்லாமாபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை அட்டாவுல்லா தரார் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ”பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.

கதிகலங்கும் பாகிஸ்தான்


எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும். பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா முழுப் பொறுப்பாகும். இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே பாகிஸ்தான் புரிந்துகொள்கிறது.  உலகில் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் பயங்கரவாதத்தை கண்டித்து வருகிறோம். உண்மையைக் கண்டறிய நடுநிலையான நிபுணர்கள் குழுவால் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முழு மனதுடன் முன்வந்துள்ளது.

எந்த விலை கொடுத்தாவது பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உறுதியை நாடு மீண்டும் வலியுறுத்துகிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து,   பாகிஸ்தான் மீது ராணுவ  நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான நேற்று கூட,  முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!...
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி...
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?...
"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!...
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு...