ஒன்று கூடிய உலக தலைவர்கள்… பிரதமர் மோடிக்கு முழு அதரவு.. நெருக்கடியில் பாகிஸ்தான்!
Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம் என உலக தலைவர்கள் கூறி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி
பஹல்கான் தாக்குதலை (Pahalgam Terror Attack) அடுத்து, உலக தலைவர்கள் பிரதமர் மோடியுடன் (PM Modi) தொலைபேசியில் பேசி வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என உலக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரச்னை
இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றாலும், இந்தியா பாகிஸ்தானை குற்றச்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளும் கடுப்பில் உள்ளன. மேலும், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
எல்லையில் விமானப்படை, கடற்படை குவிந்துள்ளனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளன. இதற்கிடையில், உலக நாடுகள் இநந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டர், கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என உலக நாடுகள் கூறி வருகிறது. தங்களது ஆதரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக தலைவர்கள் பேசி வருகின்றனர்.
பிரதமருக்கு போன் போட்ட உலக தலைவர்கள்
I spoke today with Indian Prime Minister @narendramodi and expressed my condolences, and those of the people of Israel, to the people of India following the Islamic terrorist attack in Kashmir. 🇮🇱🇮🇳
Prime Minister Modi thanked me for sharing in India’s grief and emphasized that…
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) April 24, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, பிரிட்டன் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். உலக தலைவர்கள் அனைவரும் இந்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவளிப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது மற்றும் அனைத்து பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது தெரிவித்திருப்பது. அனைத்து முக்கிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 2025 ஏப்ரல் 24ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என கூறினார். எனவே, இந்தியா ராணுவத்தின் பதிலடி நேரடி இருக்குமா அல்லது மறைமுகமாக இருக்குமா என்பது தெரியவில்லை.
வான்வழி தாக்குதல் நடத்தலாம். இல்லையென்றால், ஏவுகணைகள் மூலம் குறிபார்த்து தீவிரவாத முகாம்களை அழிக்கலாம். அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்திய ராணுவம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. எனவே, இந்தியா நிச்சயமாக பெரிய பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு அதனை உறுதிப்படுத்துகிறது.