மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

Earthquake Strikes Myanmar for 2 Times in a Day | மியான்மரில் ஏற்கனவே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏறபட்டு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

மியான்மரில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Apr 2025 08:54 AM

மியாம்னர், ஏப்ரல் 19 : இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (Myanmar) ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து அந்த நாடு இன்னும் மீண்டு வராத நிலையில், தொடர்ந்து மியான்மரை நிலநடுக்கம் தாக்கி வருவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 18, 2025) இரவு 11.31 மணி அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று (19, 2025) நள்ளிரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மியான்மரின் தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மியான்மரை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரை மார்ச் 28, 2025 அன்று மிக கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. அன்று மியான்மரை தாக்கிய நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்த நிலையில், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால் ஏராளமான மக்கள் தங்களது உடமைகளை இழந்து வீதியில் நின்றனர். இந்த கடுமையான நிலநடுக்கம் அங்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியது. மியான்மரின் அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்தே அந்த நாடு இன்னும் மீண்டு வராத நிலையில், மேலும் மேலும் மியான்மரை நிலநடுக்கம் தாக்கி வருகிறது.

பதற வைக்கும் மியான்மர் நிலநடுக்க காட்சிகள்

ஒரே நாளில் இரண்டு முறை தாக்கிய நிலநடுக்கம்

மியான்மரை மார்ச் 28, 2025 அன்று தாக்கிய நிலநடுக்கத்தின் பாதிப்புகளே அங்கு இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ள நிலையில், அங்கு மேலும் மேலும்  நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (ஏப்ரல் 18, 2025) இரவு 11.31 மணி அளவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது. அதனை தொடர்ந்து ஒருசில மணி நேரங்கள் கழித்து இன்று (ஏப்ரல் 19, 2025) நள்ளிரவு 01.4 மணி அளவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

3.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

ரிக்டர் அளவு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.