காலையிலேயே அதிர்ச்சி.. ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. என்னாச்சு?

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் 5.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாக்லானிலிருந்து கிழக்கே 164 கிமீ தொலைவில் உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இது டெல்லியிலும் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலையிலேயே அதிர்ச்சி.. ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. என்னாச்சு?

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

Updated On: 

16 Apr 2025 08:50 AM

ஆப்கானிஸ்தானில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று காலையிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. பாக்லானிலிருந்து கிழக்கே 164 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், டெல்லி-என்சிஆர் பகுதி உட்பட இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்

ஐக்கிய நாடுகளின் காலநிலை அலுவலகத்தின் கூற்றுன்படி, ஆப்கானிஸ்தான் அடிக்கடி இயற்கை பேரிடர்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடும். குறிப்பாக, நிலச்சரிவு, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கதால் பல்லாயிரக்கானோர் உயிரிழந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானில் டெக்டோனிக் தட்டுகள் அதிகமாக கொண்டதாக உள்ளது. இந்த டெக்டோனிக் தட்டுகள் ஒன்று மோதும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இது கடலில் ஏற்படும் போது சுனாமியாக இருக்கிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் 2025 ஏப்ரல் 16ஆம்  தேதியான இன்று  5.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மிதமானது முதல் அதிக தீவிரம் கொண்ட நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது.

என்னாச்சு?

மக்கள் அடர்த்தியான பகுதியில் இந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, தஜிகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் மத்திய ஆசிய நாட்டைத் தாக்கிய மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த வாரம் தஜிகிதானில் முதலில் 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது, 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்மையில், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருநாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பியது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.