அணுசக்தி ஒப்பந்தம்.. ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
Donald Trump On Iran : அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று ஈரானுக்கும், அமெரிக்காவுக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள சூழலில், டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்கா, ஏப்ரல் 12: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ராணுவ நடவடிக்கை டிரம்ப் எச்சரிக்க விடுத்திருக்கிறார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அணுசக்தி திட்டத்தில் இருநாடுகளுக்கு இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம்
அதாவது, அணுஆயுதம் தயாரிப்பதற்கு ஈரான் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து, அணு ஆயுதத்தை தயாரிக்க கூடாது என்றும், மாறாக அணுசக்தி திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால், ஈரான் தனது அணுசக்தி திட்டம் பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறது. இருப்பினும், இதனை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா, இதற்கான ஒப்பந்தம் செய்யவும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இதற்கு ஈரான் மறுத்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்கா – ஈரான் இடையே 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஓமனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் சந்திக்க உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி பேச்சுவார்த்தைகாக ஈரானும், அமெரிக்காவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ” ஈரான் ஒரு அற்புதமான, சிறந்த, மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
ஆனால் அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது.அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார். மேலும், இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “ஈரான் அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதே டிரம்பின் முதன்மையான நோக்கம்.
அதிபர் டிரம்ப் ஒரு ஒப்பந்தம் போட உள்ளார். இதில் தோல்வி அடைந்தால், ஈரான் மீது டிரம்ப் வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறார்” என்று கூறினார். இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தில் உண்மையான மற்றும் நியாயமான உடன்பாட்டை நாடுவதாக ஈரான் கூறியுள்ளது. எனவே, 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு அணு ஆயுதம் குறித்து வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு டிரம்ப், அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.