குறையுமா செல்போன் விலை? பரஸ்பர வரியில் பெரிய மாற்றம்… டிரம்ப் எடுத்த முடிவு!

Donald trump On Tariffs : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரியில் இருந்து போன்கள், லேப்டாப் உள்ளிட் மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளார். இந்த அறிவிப்பு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், செல்போன், லேப்டான் விலை உயராமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறையுமா செல்போன் விலை? பரஸ்பர வரியில் பெரிய மாற்றம்... டிரம்ப் எடுத்த முடிவு!

டிரம்ப்

Updated On: 

13 Apr 2025 08:00 AM

அமெரிக்கா, ஏப்ரல் 13: ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல மின்னணு தயாரிப்புகளுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விலக்கு சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குடியுரிமை, டாலர் வர்த்தகம், வரி விதிப்பு விவகாரங்களில் கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பரஸ்பர வரியில் பெரிய மாற்றம்

அதன்படி, அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்து அண்மையில் டிரம்ப் அறிவித்தார். அந்த வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்து அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சீனா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரியை விதித்தார். இதில் குறிப்பாக, சீனாவுக்கு 34 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக 84 சதவீதம் வரியை அமெரிக்காவுக்கு விதிக்கப்போவதாக சீனா அறிவித்திருந்த நிலையில், அதை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.

இதில் கடுப்பான டிரம்ப் சீனா மீது 145 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். இதனால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. அதோடு, பரஸ்பர வரியை இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

போன்கள், லேப்டாப்களுக்கு வரியில் இருந்து விலக்கு

ஆனால், சீனாவுக்கு மட்டும் 145 சதவீத வரியை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக கூறினார். இப்படி இரு நாடுகளும் மாறி மாறி விரி விதித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல மின்னணு தயாரிப்புகளுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விலக்கு சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். போன், லேப்டாப் தவிர, டிஸ்க், Semiconductor chips, memory chips, telecommunication equipments, recording devices உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கு தற்காலிகமாக இருக்கலாம். இந்த தயாரிப்புகள் வேறு வரிக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட மின்னணு நிறுவனங்களுக்கு பெரிதும் உதவும். அதே நேரத்தில் செல்போன்கள் விலை உயரலாம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.