கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்.. அவசர நிலை பிறப்பித்த அரசு!

Colombia Declares Yellow Fever Emergency | கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது அங்கு ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், அதிக தொற்று பரவாமல் இருக்க அங்கு அவசர நிலை பிறப்பித்து அந்த நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்.. அவசர நிலை பிறப்பித்த அரசு!

மாதிரி புகைப்படம்

Published: 

18 Apr 2025 08:57 AM

கொலம்பியா, ஏப்ரல் 18 : கொலம்பியாவில் (Colombia) வேகமாக பரவும் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) காரணமாக அங்கு அவசர நிலை (Emergency) பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 16, 2025 அன்று அந்த நாட்டு அரசு அங்கு அவசர நிலை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் மற்றும் பயணங்களின் போது தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொலம்பியாவில் தற்போது நிலவும் சூழல் என்ன, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கான அவசியம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொலம்பியாவில் வேகமார பரவி வரும் மஞ்சள் காய்ச்சல்

தென் அமெரிக்க (South America) நாடான கொலம்பியாவில் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே மஞ்சள் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் பரவும் என WHO (World Health Organization) அறிவித்துள்ளது. இந்த தொற்றுக்கு காய்ச்சல், தலை சுற்றல், வாந்தி, தலைவலி, பசியின்மை உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த தொற்று மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் நிலையில், அது வேகமாக பரவும்  தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

வேகமாக பரவும் மஞ்சள் காய்ச்சல் – அவசர நிலை அறிவித்த அரசு

34 பேரின் உயிரை குடித்த மஞ்சள் காய்ச்சல்

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவ தொடங்கியது முதலே அங்கு தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, இதுவரை அங்கு 74 தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 34 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு தற்போது அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த நாட்டு அதிபர், கொலம்பியாவில் தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது தொற்று ஆபத்து உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அங்கு தற்போது ஈஸ்டர் கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், நோய் தொற்று எண்ணிகை அதிகரிப்பதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.