“உங்களுக்கு உரிமை இல்ல” பனாமா கால்வாய் விவகாரத்தில் சீனா அதிரடி.. உற்று பார்த்த அமெரிக்கா!
China On Panama Canal : பனாமா கால்வாயை அமெரிக்கா மீட்டுக்க முயன்று வரும் நிலையில், இதில் அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று சீனா அதிரடியாக கூறியுள்ளது. இருப்பினும், பனாமா கால்வாயை மீட்டெடுப்போம் என்றும் இதன் மூலம் சீனாவின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பனாமா கால்வாய் - டிரம்ப்
அமெரிக்கா, ஏப்ரல் 09: உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான பனாமா கால்வாயை (Panama Canal) அமெரிக்கா திரும்பப் பெறும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். பனாமா கால்வாயை திரும்ப பெறுவதன் மூலம் சீனாவின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பனாமா கால்வாய் விவகாரத்தில் சீனா அதிரடி
குறிப்பாக வரி விதிப்பில் தீவிரம் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான் பனாமா கால்வாய். டிரம்ப் தேர்தல் நேரத்திலேயே பனாமா கால்வாயை மீட்டெடுப்போம் என்று உறுதி அளித்தார். சீனாவின் ஆதீக்கம், அதிக கட்டணம் போன்ற காரணங்களால் பனாமா கால்வாயை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நிலையல், பனாமா கால்வா அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் 2025 ஏப்ரல் 8ஆம் தேதி பார்வையிட்டார். அங்கு பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோவுடன் சந்திப்பை நடத்தினார். இதற்கு பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “பானாமா கால்வாய் சீனாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவும் பனாமாவும் இணைந்து அதைப் பாதுகாப்பாக வைக்கும். பனாமா கால்வாயின் செயல்பாட்டை சீனா அல்லது வேறு எந்த நாடும் அச்சுறுத்த அனுமதிக்காது. பனாமாவும் அமெரிக்காவும் ஒன்றாக சேர்ந்து, பனாமா கால்வாயை சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டெடுப்போம்.
உற்று பார்த்த அமெரிக்கா
China did not build this canal.
China does not operate this canal.
and China will not weaponize this canal.
Together, we will take back the canal from China’s influence. pic.twitter.com/CiFCOJJFw6
— Pete Hegseth (@PeteHegseth) April 8, 2025
சீனா இந்தக் கால்வாயைக் கட்டவில்லை. சீனா இந்தக் கால்வாயை இயக்குவதில்லை, சீனா இந்தக் கால்வாயை ஆயுதபாணியாக்காது. பனாமா கால்வாயைப் பாதுகாப்பாகவும் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வதாகவும் நாங்கள் வைத்திருப்போம்.
பென்டகன் அதிபர் சீனாவின் அச்சுறுத்தலை புரிந்து கொண்டுள்ளார். கால்வாயின் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதில் பனாமா கவனம் செலுத்தி வருகிறது. பனாமா மக்களின் உணர்திறன்களுக்கு ஒரு சான்றாகத் தோன்றியது” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த சீன தூதரகம், “பனாமா கால்வாய் தொடர்பாக மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா தனது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக மிரட்டலைப் பயன்படுத்தியுள்ளது. மேலும் பனாமா யாருடன் வணிகம் செய்கிறது என்பது பனாமாவின் இறையாண்மை முடிவு. அமெரிக்கா இதில் தலையிட உரிமை இல்லை” என்று கூறியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று பனாமா. இங்கு பனாமா கால்வாய் அமைந்துள்ளது. இது சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய பாதையாக உள்ளது. இநத் கால்வாய்யை 1900ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா கட்டியது. வணிக மற்றும் இராணுவக் கப்பல்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக இந்த கால்வாய்யை கட்டியது.
பின்னர், 1977ஆம் ஆண்டு அதிபர் ஜிம்மி கார்ட்டரால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ், டிசம்பர் 31, 1999 அன்று இந்தக் கட்டுப்பாடு பனாமாவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த பனாமா கால்வாயை அமெரிக்கா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது.