பேய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு – என்ன காரணம் தெரியுமா?
Ghost Marriage in China: சீனாவில் (China) இறந்துபோன மனிதர்களுடன் திருமணம் என்ற சடங்கு தற்போது வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சடங்கு 3000 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலர் திருமணமாகாமல் இளம் வயதிலேயே இறந்து விடுவார்கள். அப்படி இறந்து போகும் நபர்கள் மரணத்துக்கு பின் தனிமையில் இருப்பார்கள் என்பதால் அவர்களின் தனிமையை போக்க இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
உலக அளவில் பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கை திருமணத்தை (Marriage) சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இருமனங்களை இணைப்பது தான் திருமணம் என எளிதில் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் படிப்பு (Education), வேலை, தொழில் என அனைத்தும் திருமணங்களை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. திருமணத்துக்கு பிறகு சகல வசதிகளுடன் கூடிய வீடு, குழந்தைகளுக்கான கல்வி, அவர்களது வாழ்க்கை என ஒரு மனிதனின் வாழ்க்கை திருமணத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது என சொல்லலாம். இப்படி திருமணங்கள் சுற்றி நடக்கும் சில சுவாரசியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் (China) இறந்துபோன மனிதர்களுடன் திருமணம் என்ற சடங்கு தற்போது வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதற்கான காரணமும் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருக்கின்றன. இத்தகைய நம்பிக்கைகள் மதங்களுடன் தொடர்புடையவை என்பதால் யாராலும் கேள்வி கேட்க முடிவதில்லை. உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான சீனாவில் பேய்களுடன் திருமணம் செய்யும் சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கு 3000 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.
இறந்துபோனவர்களின் தனிமையைப் போக்கும் திருமணம்
ஒரு சிலர் திருமணமாகாமல் இளம் வயதிலேயே இறந்து விடுவார்கள். அப்படி இறந்து போகும் நபர்கள் மரணத்துக்கு பின் தனிமையில் இருப்பார்கள் என்பதால் அவர்களின் தனிமையை போக்க இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கை இறந்து போனவர்களின் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறதாம். வழக்கமாக உயிருள்ள ஒரு ஆண் – பெண் திருமணத்தை விட இந்த திருமணத்துக்கு அதிக பொருட்செலவு ஆகும் என கூறப்படுகிறது. காரணம் இதற்கான சடங்குகள் அதிகம் என்பதால் தான்.
இறந்துபோன நபருக்கு பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணம்
மேலும் வழக்கமாக திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகளின் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது போலவே இந்த திருமணத்திலும் இறந்துபோன நபருக்கு ஏற்ற பொருத்தமான மணமகளையோ அல்லது மணமகனையோ தேர்ந்தெடுத்து திருமணம் செய்வார்களாம். அப்படி பொருத்தம் பார்த்து உயிருடன் இருப்பவருக்கும் இறந்துபோன நபருக்கும் திருமணம் நடக்கும் அல்லது இரண்டு இறந்து போன நபர்களுக்கும் நடக்கும் திருமணமாக இருக்கலாம். இதற்காக ஃபெங் சுய் என்ற மாஸ்டரை அவர்களுக்கு உதவுவார். அவர் இறந்து போன நபரை கல்லறையில் இருந்து மீட்டு திருமணத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்து மணமுடித்து வைப்பாராம்.
சைனாவின் கிராமப்புறங்களில் இந்த சடங்குகள் இன்னும் தொடர்கிறது. மேலும் இறந்து போன நபர்கள் தனிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக மட்டும் இந்த திருமணங்கள் நடப்பதில்லை. அடுத்த ஜென்மத்திலும் இறந்துபோனவர் திருமணமாகாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த சடங்குகள் நடத்தப்படுகிறதாம். இந்தியாவில் இறந்து போனவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக நடக்கும் சடங்குகளைப் போல சீனாவில் இறந்து போனவர் தனிமையில் இருக்கக் கூடாது என இந்த சடங்குகள் நடக்கிறது.