சீனாவின் ‘உலகின் அதிவேக ரயில்’ – அப்படி என்ன ஸ்பெஷல்?
சீன ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் அதிக வேகத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது, மேலும் வடிவமைப்பு எனர்ஜி பயன்பாட்டை 20 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கிறது. இந்த ரயில் தற்போது இரண்டு முன்மாதிரிகளான சிஆர்450 ஏஎஃப் மற்றும் சிஆர் 450பிஎஃப் என இரண்டு வகைளில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சீனா (China) சிஆர்450 என்ற அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த ரயில் மணிக்கு 400 கிமீ வேகத்தில் இருந்து அதிகபட்சமாக 450 கிமீ வேகம் வரைக்கும் பயணிக்கும். இது உலகின அதிவேக ரயில்(Train) என்று கூறப்படுகிறது. நம்பப்படுகிறது. சமீபத்தில், சீனா இந்த சிஆர்450 ரயிலின் முன்மாதிரியைக் காட்சிப்படுத்தியது. இந்த ரயிலானது மற்ற அதிவேக ரயில்களைக் காட்டிலும் பல மாற்றங்களை கொண்டிருக்கிறது. இது ரயில் தொழில்நுட்பத்தின் புரட்சியாக பார்க்கப்படுகிறது. இது தற்போதைய சிஆர்400 ரயில்களை விட அதிகமாக இருக்கும். சிஆர் 400 ரயில்கள் மணிக்கு 350 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. சீன ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் அதிக வேகத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது, மேலும் வடிவமைப்பு எனர்ஜி பயன்பாட்டை 20 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கிறது. இந்த ரயில் தற்போது சிஆர்450 ஏஎஃப் மற்றும் சிஆர் 450பிஎஃப் என இரண்டு வகைளில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சீனாவின் சிஆர் 450 ரயிலின் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த ரயிலில் உள்ள பெரிய கேபின்கள் பொதுவாக ரயிலில் ஏற்படும் இரைச்சல்களைக் குறைக்கும். மேலும் இதில் மிதிவண்டிகள் மற்றும் சக்கர நாற்காலிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தனியாாக கேபின்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கைக் கொண்ட சீனா (47,000 கி.மீ), பெய்ஜிங்-ஷாங்காய் பாதையைப் போலவே பயண நேரத்தை 4.5 மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் குறைக்க CR450 ஐப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள CR400 ரயில்களின் அடிப்பைடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக வேகத்தை அதிகரிக்கவும், சிறந்த ஆற்றல் திறனுக்காகவும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிஆர்450 ரயிலின் இன்ஜினானது, அதிகவேக ரயிலினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து பாதுகாப்பான பயணத்தை வழங்கக்கூடியது என கூறப்படுகிறது. புதிய CR450 அதிவேக ரயில் பொதுவாக ரயில் பயணங்களில் உருவாகும் அதிகப்படியான காற்றின் எதிர்ப்பை கட்டுப்படுத்துகிறது. இது ரயிலின் வேகத்தை அதிகரிக்க உதவும். இந்த ரயிலில் கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதால் எனர்ஜியை குறைவாக செலவழித்து, ரயிலை விரைவுபடுத்த உதவும்.
பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்
மேலும் இந்த புதிய சிஆர்450 அதிவேக ரயிலில் பயணிகள் சௌகரியமாக பயணிக்க 4 வெவ்வேறு வகுப்புகள் இருக்கின்றன. அதில் பயணிகள் வசதியாக பயணிக்க வணிக வகுப்பு, பிரீமியம் முதல் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ஆகியவை நல்ல பயண அனுபவத்தைக் கொடுக்கும். 4வதாக இரண்டாம் வகுப்பு சாதாரண இருக்கைகளுடன் மக்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிஆர்450 அதிவேக ரயிலானது, கடந்த நவம்பர் 26, 2024 அன்று பெய்ஜிங்கில் பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த புதிய CR450 அதிவேக ரயிலின் மூலம், சீனா அதன் வேகமான ரயில்களின் மேலும் ஒரு மகுடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போதுள்ள 48000 கிலோமீட்டர் வேகமான ரயில் பாதை 60000 கிலோமீட்டராக அதிகரிக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.