கனடாவில் ஹிந்து கோவில் சேதம் – அடையாளத்தை வெளியிட்ட போலீஸ்!
ஹால்டன் போலீஸார் தங்களது எக்ஸ் பக்கத்தில் சந்தேகப்படும் நபர்களின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். அவர்களது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கிரேட்டர்டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவன கோவிலின் முகப்பை சிலர் சேதப்படுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சந்தேகப்படும்படி உள்ள இரண்டு பேரை கண்டறிந்திருக்கிறோம். அவர்களது போட்டோவை வெளியிட்டிருக்கிறோம்.

கனடாவில் (Canada) உள்ள கிரேட்டர் டொராண்டோ (Greater Toronto) பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவன கோயிலுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக ஹால்டன் போலீஸார் தங்களது எக்ஸ் பக்கத்தில் சந்தேகப்படும் நபர்களின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். அவர்களது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கிரேட்டர்டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவன கோவிலின் முகப்பை சிலர் சேதப்படுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சந்தேகப்படும்படி உள்ள இரண்டு பேரை கண்டறிந்திருக்கிறோம். அவர்களது போட்டோவை வெளியிட்டிருக்கிறோம். அவர்கள் யார் என தெரிந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 30, 2025 அதிகாலை 1 மணியளவில் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள பகுதி சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்திருக்கிறது. பின்னர் அன்றைய தினம் காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது கோவிலின் முகப்பு சேதப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு பேர் மீது சந்தேகம்
இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேர் மீது சந்தேகப்படுகின்றனர். இரண்டு பேர் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றில் இருந்து வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருவரும் வெள்ளை இளைஞர்கள் எனவும் ஹூடி ஸ்வெட்ஷர்ட் அணிந்திருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களை கைது செய்த பிறகே இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த கோவிலின் கிஷோர் ரெட்டி என்ற பக்தர் ஒருவர் சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, ஜார்ஜ்டவுனில் இது போன்று நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு இது கோவில் என நன்றாக தெரியும். இதனை இந்து மதத்துக்கு எதிரான செயலாக பார்க்கிறேன் என்றார்.
இந்து கனேடியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, இந்த சமுதாயத்தின் சமநிலையை சீர்குலைக்கு் செயல். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை கடுமையான தண்டனை தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகள்
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் சில ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 2024 நவம்பர் மாதம், பிராம்ப்டனில் உள்ள ஹிந்து சபாவில் நடந்த காலிஸ்தான் போராட்டம் கோயில் மீது திரும்பியது. அப்போது உள்ளே இருந்த பக்தர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காலிஸ்தான் ரெஃபரெண்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த இந்திரஜித் கோசல் கைது செய்யப்பட்டார்.