புதுசா இருக்கே.. கனடாவில் திங்கள் கிழமையில் மட்டுமே தேர்தல்… காரணம் இதுதானா?
Canada Election 2025 : கனடாவில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தேர்தல் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மார்க் கார்னியின் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் திங்கள் கிழமையில் மட்டுமே தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.

கனடா தேர்தல்
கனடா, ஏப்ரல் 29: கனடாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (Canada Election) 2025 ஏப்ரல் 28ஆம் தேதி (நேற்று) முதல் நடைபெற்று வருகிறது. 345 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் லிபரல் கட்சி (Liberal Party) தலைவர் மார்க் கார்னி முன்னிலை வகித்து வருகிறார். சமீபத்திய நிலவரப்படி, லிபரல் கட்சி 145 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 104 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கனடாவை பொறுத்தவரை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2021ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. 2015ஆம் ஆண்டு கனடாவில் லிபரல் ஆட்சி நடந்து வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெறும் கனடா தேர்தல்
2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்து வந்த நிலையில், 2025 ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டீன் ட்ரூடோ விலகினார். உட்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி, வரி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
இதன்பிறகு, கனடா பிரதமராக லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வானார். 2025 அக்டோபர் மாதம் பதவிக் காலம் முடிவடை உள்ளது. இருப்பினும், மார்க் கார்னி தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார்.
இந்த நிலையில், கனடாவில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் உள் 343 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 172 தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 162 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 149 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், திங்கள் கிழமையில் மட்டும் தான் கனடாவில் தேர்தல் நடத்தப்படும். இது பலருக்கும் ஆச்சிரியத்தை தரலாம். அதற்கு காரணத்தை இங்கு பார்ப்போம். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறையும் கனடாவில் திங்கள்கிழமையில் தான் தேர்தல் நடைபெறும்.
இது அங்கு சட்டமாகவே உள்ளது. 2007 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தேர்தல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த நடைமுறையை கொண்டு வந்தார். திங்கள் கிழமை தேர்தல் நடைபெற்றால் அந்நாட்டு மக்கனை தயார் படுத்த உதவும் என சொல்லப்பபடுகிறது.
ஏன் ஒவ்வொரு ஆண்டும் திங்கள்கிழமை நடைபெறுகிறது?
அதாவது, வார நாட்களான சனி, ஞாயிறு கிழமைகள் கனடா மக்கள் எப்படி வாக்களிப்பது, எங்கு வாக்களிப்பது என்பதை திட்டமிட உதவும். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வாக்களிக்க எங்கே செல்வது, வேலை நேரம் உள்ளிட்டவற்றை தயார் செய்து, அதற்கு ஏற்ற நேரத்தில் அடுத்த நாள் திங்கள்கிழமை வாக்களிக்க உதவும்.
இதனால், நான்காவது ஆண்டுகளில் அக்டோபர் மாதம் மூன்றாவது திங்கள்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. இதனை வார இறுதி நாட்களில் தேர்தல் பணியாளர்கள் செய்து கொள்வார்கள்.
அக்டோபர் மாதத்தில் மூன்றாவது திங்கட்கிழமை விடுமுறை நாளாக இருந்தால், செவ்வாய் கிழமையில் தேர்தல் நடத்தப்படும். 2008ஆம் ஆண்டு திங்கள்கிழமைக்கு பதில் செவ்வாய் கிழமை 2008 அக்டோபர் 14ஆம் தேதி தேர்தல் நடந்தது. 2025ஆண்டு ஆளுங்கட்சியான லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டதால் ஏப்ரலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.