முதல்முறையாக பானிபூரி சாப்பிட்ட மாணவர்கள்… அவர்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க!
budapest students Eats panipuri: ஹங்கேரிய நாட்டின் புடாபெஸ்ட் மாணவர்கள் முதல்முறையாக பானிபூரியை சாப்பிட்டுள்ளனர். அப்போது, மாணவர்கள் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ சோஷியல் மீடியாவில் ரைலாகி வருகிறது. மேலும், பானிபூரி நன்றாக இருப்பதாகவும் தனது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்து வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியர்களின் பிடித்த உணவாக இருக்கும் பானிபூரியை, புடாபெஸ்ட் மாணவர்கள் முதல்முறையாக சாப்பிட்டுள்ளனர். அவர்கள் சாப்பிடும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பானிபூரியை முதல்முறையாக சுவைத்த அவர்களது ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. இந்தியர்களின் ஆல் டைம் பேவரைட்டாக இருப்பது பானிபூரி. நாட்டின் ஒவ்வொரு மூளை மூட்டிக்கிலும் பானி பூரி கடைகள் இயங்கி வருகிறது. வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த பானி பூரி, தற்போது, தென் மாநிலங்களில் கூட பானி பூரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல்முறையாக பானிபூரி சாப்பிட்ட மாணவர்கள்
பானி பூரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹங்கேரி நாட்டின் தலைநகரின் புடாபெஸ்ட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழக ஒன்றில் படிக்கும் மாணவர்கள் முதல்முறையாக இந்திய உணவான பானிபூரி சாப்பிட்டு உள்ளனர்.
ஹங்கேரிய தலைநகரில் படிக்கும் ஒரு மாணவர் தங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தின நிகழ்ச்சியில் இந்திய உணவான பானிபூரி பரிமாரப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவர்களின் வீடியோக்களை மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹங்கேரிய தலைநகரில் படிக்கும் ஒரு மாணவர் தங்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தின நிகழ்ச்சியில் இந்திய உணவான பானிபூரி பரிமாரப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவர்களின் வீடியோக்களை மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
View this post on Instagram
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுகளில் இந்திய உணவான பானி பூரியும் இடம்பெற்றுள்ளது. மசாலா கலந்த உருளைக்கிழங்கு, காரமான புதினா மற்றும் புளி தண்ணீர் நிரப்பப்பட்ட மொறுமொறுப்பான பூரிகளை அவர்கள் ருசித்தபோது, அவர்களின் முகங்களில் பலவிதமான ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பதிவில், “சர்வதேச பல்கலைக்கழக தினம் மிகவும் வேடிக்கையாக இருந்தது.
எங்கள் இந்திய ஸ்டாலில் பேல் பூரி முதல் இனிப்புகள் வரை அனைத்தும் இருந்தன. ஆனால், பானிபூரி தான் முக்கியம். அனைவரும் முதல்முறையாக பானிபூரியை சாப்பிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது 4.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில், பானி பூரியைப் போல வேறு எந்த இந்திய சிற்றுண்டியும் இவ்வளவு தீவிரமான ஏக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நீங்கள் அதை விரும்ப ஆரம்பித்தவுடன், அது மிகவும் அடிமையாக்கும்” என்று கூறி வருகின்றனர்.