Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போலி மருத்துவர் மேற்கொண்ட Cosmetic Surgery.. பரிதாபமாக பலியான பெண்!

Botched Cosmetic Surgery in US Cause Woman Lost Her Life | சமீப காலமாக பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் உடல் அழகை மேம்படுத்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி மருத்துவர் மேற்கொண்ட Cosmetic Surgery.. பரிதாபமாக பலியான பெண்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 21 Apr 2025 20:12 PM

அமெரிக்கா, ஏப்ரல் 21 : அழகுக்காக அறுவை சிகிச்சை (Cosmetic Surgery) செய்துக்கொண்ட பெண், சிகிச்சை தோல்வியடைந்ததால் உயிரிழந்த (Botched Cosmetic Surgery) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிமம் பெறாத மருத்துவரிடம் அந்த பெண் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நிலையில், இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் உயிரிழந்தது எப்படி, அவர் என்ன அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அழகுக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை

அனைவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் இருக்கும். அதற்காக பல மெனக்கெடல்களையும் செய்வர். என்னதான் அழகாக இருக்க ஒப்பனைகள் செய்தாலும், முக தோற்றத்தையும், உடல் தோற்றத்தையும் மாற்ற முடியாத நிலை தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் மனிதர்களின் முகம் மற்றும் உடல் என அனைத்தையும் மாற்றி அமைக்கும் வசதி உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது முக அமைப்பை மாற்றுவது, உடல் வடிவத்தை மாற்றுவது உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய அறுவை சிகிச்சைகள் சில சமயங்களில் சிலருக்கு நல்ல பலனை கொடுத்திருந்தாலும், பலருக்கு அது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியுள்ளது.

உரிமம் பெறாத மருத்துவர் – பரிதாபமாக உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாய்

அமெரிக்காவை சேர்ந்த மரியா பெனாலோசா என்ற பெண், மார்ச் 28, 2025 அன்று பின்னால் அமரும் இடத்தில் (Butt) இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை (Implant Surgery) செய்துள்ளார். ஆனால் அவர், ஏப்ரல் 11, 2025 அன்று உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு 38 வயது ஹோயோஸ் ஃபோரோண்டா என்ற நபர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் சருமம் மருத்து போவதற்கான லிடோகைன் (Lidocaine) மருந்தை அந்த பெண்ணுக்கு செலுத்தியுள்ளார். அப்போது மரியா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மரியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முறையான உரிமம் இல்லாத போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. மரியாவின் மறைவுக்கு பிறகு அவர் கொலம்பியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மரியாவின் சகோதரி, மரியா தனது தோழியின் பரிந்துரையின்படி இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை  செய்யப்பட்ட நிலையில் மரியாவும் அவரிடம் சிகிச்சை மேற்கொண்டதாக கூறியுள்ளார். மரியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரின் மறைவு தங்களது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...