நடுவானில் பரபரப்பு.. விமானத்தை கடத்த முயன்ற நபர்.. சுட்டுக் கொன்ற பயணி!

நடுவானில் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில், அதில் பயணித்த ஒருவர் கடத்தினார். மேலும், அங்கிருந்த பயணிகளையும், விமானிகளையும் கத்தியை காட்டி மிரட்டி, விமானத்தை கடத்தினார். அப்போது, அதில், பயணித்த ஒருவர் விமானத்தை கடத்த முயன்றவர் துப்பாக்கில் சுட்டுக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் பரபரப்பு.. விமானத்தை கடத்த முயன்ற நபர்.. சுட்டுக் கொன்ற பயணி!

மாதிரிப்படம்

Updated On: 

18 Apr 2025 11:04 AM

அமெரிக்கா, ஏப்ரல் 18: விமானத்தை கடத்திய நபரை சக பயணி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தி முனையில் சிறிய ரக விமானத்தை கடத்தி அமெரிக்காவைச் சேர்ந்த நபரை பயணி ஒருவர் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. மத்திய அமெரிக்க நாடாக பெலிஸ் என்ற நாடு உள்ளது. பெஸில் நகரில் இருந்து சிறய ரக விமானம் ஒன்று சான்பிட்ரோ நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 14 பயணிகள், 2 விமானிகள் இருந்தன. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது.

நடுவானில் பரபரப்பு

அப்போது, அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து பயணிகளை மிரட்ட தொடங்கினார். மேலும், அங்கிருந்து பயணிகளையும் தாக்கினார். கத்தி முனையில் விமானத்தையும் கடத்தினார். இதனால் அங்கிருந்து பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

தன்னை பெலிஸ் நாட்டிற்கு வெளியே சென்று விட வேண்டும் என்றும் கூறி விமானிகளையும் மிரட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனை அடுத்து, விமானத்தில் ஒரு பயணி ஒருவர், விமானத்தை கடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு உள்ளார்.

இதனையடுத்து, விமானம் அவசரமாக பெலிஸில் மீண்டும் தரையிறங்கியது. அங்கு மருத்துவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக் கொலை

விமானத்தை கடத்த முயன்றவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 49 வயதான நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், சுட்டுக் கொன்றது 55 வயதான நபர் என்று தெரியவந்துள்ளது. இவர் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் விமானத்தை கடத்திய நபரை சுட்டுக் கொன்றார்.

விமானத்தில் தொடர் சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வழக்கம். ஏர் இந்தியா விமானம் உட்பட பல வெளிநாட்டு விமானங்களில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெண் பயணி மீது சிறுநீர் கழிப்பது, விமானத்தில் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், விமானத்தின் அவசர கதவை திடீரென திறப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

சமீபத்தில் கூட, சிங்கப்பூர் சென்ற விமானத்தில் விமான ஊழியரை கொலை செய்து விடுவேன் என பயணி ஒருவர் மிரட்டியுள்ளார். மேலும், மதுபோதையில் அவரிடம் அத்துமீறி நடற்ந்து இருப்பதாக தெரிகிறது. அதோடு, சக பயணிகளையும் கீழே தள்ளி அட்டாகாசம் செய்திருக்கிறார். இதனை அடுத்து, சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிவுடம் விமான அதிகாரிகள் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.