4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

America Vice President JD Vance came to India | அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் தனது இந்தியா வம்சாவளி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்துள்ளார். இந்த பயண திட்டத்தில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

இந்தியா வந்த ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர்

Published: 

21 Apr 2025 11:36 AM

டெல்லி, ஏப்ரல் 21 : அமெரிக்க துணை அதிபர் (America Vice President) ஜே.டி.வான்ஸ் (JD Vance) இன்று (ஏப்ரல் 21, 2025) தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வான்ஸ், பல்வேறு இடங்களை பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மீது அமெரிக்கா பரஸ்பர விதி (Reciprocal Tax on India) விதித்துள்ள நிலையில், வான்ஸ்-ன் இந்தியா பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளவர் ஜே.டி. வான்ஸ். இவரது மனைவி உஷா சிலூரி இந்திய வம்சாவளி பெண். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றது முதல் அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதித்தது. முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட பிர்க்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இந்த நிலையில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அறிவித்தது. இவ்வாறு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கு சுமூகமற்ற உறவு நீடித்து வரும் நிலையில், ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்துள்ளார்.

ஜே.டி.வான்ஸ் குடும்பத்தை வரவேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் (Central Railway Minister) அஷிவினி வைஷ்னவ் (Ashwini Vaishnav) வரவேற்றார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், இன்று (ஏப்ரல் 21, 2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம், வரி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி விமான நிலையம் வந்த ஜே.டி வான்ஸ்-க்கு வரவேற்பு

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு டெல்லியில் இருந்து ஜெயப்பூருக்கு செல்லும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் அங்குள்ள அம்பர் கோட்டை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.