”உங்களுக்கு தான் ஆபத்து” அணுசக்தி ஒப்பந்தம்… ஈரானை மிரட்டிய டிரம்ப்!

US Iran Nuclear Talks : அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றத்தை அடுத்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தார் ஈரான் கடும் ஆபத்தில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

”உங்களுக்கு தான் ஆபத்து அணுசக்தி ஒப்பந்தம்... ஈரானை மிரட்டிய டிரம்ப்!

அதிபர் டொனால்டு டிரம்ப்

Updated On: 

08 Apr 2025 08:54 AM

அமெரிக்கா, ஏப்ரல் 08: அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஈரான் சந்திக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நாளுக்கு நாள் ஈரானுக்கு அமெரிக்காவுக்கு மோதல் போக்குவரத்து நிலவி வருகிறது. இதற்கு காரணமாக அணுசக்தி திட்டம் தான். அதாவது, ஈரான் தற்போது அணுஆயுதம் தயாரிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஆனால், இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து, அணுசக்தி தயாரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இதுகுறித்து அதிபர் டிரம்பும் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இதற்கு ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஆணுஆயுதத்தை தயாரிக்க ஈரான் தீவிரம் காட்டி வருகிறது. அணு ஆயதத்திற்கு பதிலகா அணுசக்தி திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தம் போடவும், பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், பேச்சுவார்த்தை ஈரான் அண்மையில் மறுத்திருந்தது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில், அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிடம் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தார் ஈரான் பெரிய ஆபத்தில் இருக்கும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டிரம்பை, இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். 2025 ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும்.

“உங்களுக்கு தான் ஆபத்து”

எங்களுக்குள் மிகப்பெரிய சந்திப்பு உள்ளது. என்ன நடக்க முடியும் என்பதைப் பார்ப்போம். இந்த சந்திப்பில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. நான் ஈரானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்கள் என்று நம்புகிறேன்.

இல்லையென்றால், ராணுவ ரீதியாகச் நடவடிக்கை எடுக்க வேண்யிடிருக்கும். அது ஒரு பயங்கரமான விஷயமாக இருக்கும் என்று கூறியிருந்தேன். ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் ஈரான் பெரும் ஆபத்தில் இருக்கும். ஆபத்தை எதிர்கொள்வதை விட, ஒப்பந்தம் செய்வது சிறப்பானது” என்று கூறினார்.

கடந்த 2017 முதல் 21ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த டிரம்ப், ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். மேலும், கடந்த 2015ம் தேதி அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனால், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றத்தை அடுத்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.