68வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் வயதான கொரில்லா.. வைரல் வீடியோ!

World's Oldest Gorilla Fatou | உலகின் மிகவும் வயதான கொரில்லாவாக கருதப்படும் ஃபாட்டு ஜெர்மனியில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ளது. அங்கு ஃபாட்டு தனது 68வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

68வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் வயதான கொரில்லா.. வைரல் வீடியோ!

ஃபாட்டு

Published: 

15 Apr 2025 16:44 PM

ஜெர்மனி, ஏப்ரல் 15 : ஜெர்மனியில் (Germany) உள்ள மிருகக்காட்சி சாலையில் (Animal Zoo)  கொரில்லா (Gorilla) ஒன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. பொதுவாக கொரில்லாக்கள் சுமார் 35 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவையாக உள்ள நிலையில், இந்த கொரில்லா மிக அதிக ஆண்டுகள் வாழ்ந்த உலகின் மிகவும் முதுமையான கொரில்லாவாக (World’s Oldest Gorilla) உள்ளது. இந்த கொரில்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மிருகக்காட்சி அதிகாரிகள் அதற்கு பழங்களை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

68வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிகவும் வயதான கொரில்லா

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு சில குறிப்பிட்ட காலம் வரை உயிர் வாழும். ஒவ்வொரு விலங்கிற்கும் இந்த ஆயுள் காலம் மாறுபடும். குறிப்பாக மனிதர்கள் 100 ஆண்டுகள் வாழும் திறனை கொண்டவர்கள் போல வேறு சில விலங்குகள் குறிப்பிட்ட காலம் மட்டுமே வாழும் திறனை கொண்டிருக்கும். அந்த வகையில், குரங்கு வகை உயிரினமாக கருதப்படும் கொரில்லாக்கள் வெறும் 35 முதல் 50 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவையாக உள்ளன.

இந்த நிலையில், ஜெர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஃபாட்டு (Fatou) என்ற கொரில்லா உள்ளது. இந்த கொரில்லா ஏப்ரல் 13, 2025 அன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. இதன் காரணமாக உலகின் மிக வயதான கொரில்லாவாக இது உள்ளது. ஃபாட்டு 1957 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், 1959 ஆம் ஆண்டு அந்த மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அது முதல் அது அங்கே வளர தொடங்கியுள்ளது.

தற்போது மிருகக்காட்சியின் செல்ல பிள்ளையாக உள்ள ஃபாட்டுவின் 68வது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு ஏப்ரல் 11, 2025 அன்று அதிகாரிகள் அதற்கு ஒரு கூடை நிறைய அதற்கு பிடித்தமான பழங்களை சாப்பிட கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் ஃபாட்டு தனக்கு பிடித்த பழங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் ஃபாட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.