இலவச உணவுக்காக ஹோட்டலில் கெஸ்டாக நடித்த பெண் – வசமாக சிக்கியது எப்படி?

அவரும் அவரது நண்பர்களும் இலவச காலை உணவை சாப்பிட்டிருக்கின்றனர். அப்போது நிஷு திவாரியுடன் வந்த ஒருவர் தனது போனை சாப்பிடும் இடத்திலேயே வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போது ஊழியர்கள் நிஷு அளித்த ரூம் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது அவர் தங்களை ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது.

இலவச உணவுக்காக ஹோட்டலில் கெஸ்டாக நடித்த பெண் - வசமாக சிக்கியது எப்படி?

கண்டென்ட் கிரியேட்டர் நிஷு திவாரி

Published: 

28 Mar 2025 05:03 AM

டெல்லியைச் (Delhi) சேர்ந்த ஒரு கண்டென்ட் கிரியேட்டர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தினராக நடித்து இலவச காலை உணவை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் வசமாக மாட்டிக்கொண்டதன் காரணமாக ரூ.3600 செலுத்த வேண்டியிருந்திருக்கிறது. நிஷு திவாரி என்ற அந்த கண்டென்ட் கிரியேட்டர் (Content Creator)  நல்ல உடையணிந்து டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பரமான பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஹோட்டல் ஊழியர்களிடம் போலியான அறை எண்ணைக் கொடுத்து, அவர்களை ஏமாற்றியிருக்கிறார். அவர் சொன்னதை உண்மை என நம்பிய அந்த ஹோட்டல் (Hotel) பணியாளர்கள் அவரை காலை உணவு வழங்கப்படும் பஃபே பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

 வசமாக சிக்கியது எப்படி?

அங்கு அவரும் அவரது நண்பர்களும் இலவச காலை உணவை சாப்பிட்டிருக்கின்றனர். அப்போது நிஷு திவாரியுடன் வந்த ஒருவர் தனது போனை சாப்பிடும் இடத்திலேயே வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அப்போது ஊழியர்கள் நிஷு அளித்த ரூம் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது அவர் தங்களை ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. அதன் பிறகு நிஷு திவாரியை விசாரித்தபோது தங்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரை காலை உணவுக்கான பணத்தை செலுத்த வேண்டியிருந்திருக்கிறது.

விபரீதத்தில் முடிந்த ரீல்ஸ்

 

நிஷு திவாரி ஒரு மிகவும் பிரபலமான கண்டென்ட் கிரியேட்டர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.3 மில்லியன் பாலோயர்களை கொண்டிருக்கிறார். இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு ரீல்ஸ்க்காக பரிசோனை முயற்சியாக இதனை செய்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். அவரும் அவர் நண்பர்களும் நல்ல உடையணிந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்கள். தாங்கள் தங்கியிருக்கும் அறை எண் என பொய்யாக ஒரு எண்ணை அளித்திருக்கிறார். தான் அந்த ஹோட்டலில் இணையதளம் மூலம் ரூம் புக் செய்திருந்ததாக தெரிவிக்க, உடனடியாக அவர் சொன்னதை நம்பி காலை உணவு வழங்கப்படும் இடத்துக்கு ஹோட்டல் ஊழியர்கள் அவரை அழைத்து சென்றிருக்கின்றனர். தனது திட்டம் நிறைவேறியது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

எதிர்பாராதவிதமாக தன்னுடன் வந்தவர் போனை மறந்துவைத்து விட்டு வந்ததால் அவர் சொன்ன அறைக்கு ஊழியர்கள் போன் செய்திருக்கிறார்கள். அங்கே வேறு ஒருவர் தங்கியிருப்பதை அறிந்த பிறகு தான் நிஷு தங்களை ஏமாற்றியது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. மாட்டிக்கொண்டது தெரிந்தததும் தாங்கள் வேறு ஹோட்டலுக்கு பதிலாக இங்கு மாற்றி வந்துவிட்டோம் என சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறார். ஆனால் அவர் சொன்னதை நம்பாமல் அவரை ரூ.36000 பணம் செலுத்த சொல்லியிருக்கிறார்.

நிஷுவின் செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்

இந்த நிலையில் நிஷுவின் செய்கையை பலர் பாராட்டியும் விமர்சித்தும் வருகின்றனர். அதில் ஒருவர் நீங்கள் இதனை காமெடிக்காக செய்திருக்கலாம். ஆனால் அதனை பார்க்கும் ஒருவருக்கு உண்மையில் இப்படி செய்யலாம் என தோன்றலாம். ஏன் ஒரு குற்றத்தை செய்ய ஒருவரை தூண்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். சிலர் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பினர். “இந்த ரீல் பற்றி நீங்கள் ஹோட்டலுக்கு முன் கூட்டியே தெரிவித்தீர்களா? ஏனெனில் எந்த ஹோட்டலும் இதுபோன்ற வீடியோ எடுப்பதை அனுமதிக்காது. என்று ஒருவர் கமண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த நிஷு திவாரி, ஹோட்டல் ஊழியர்கள் மக்கள் தங்களைத் தாங்களே வீடியோ எடுப்பதை தடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.