Viral Video : பள்ளத்தாக்கிற்கு நடுவே மரத்தின் உச்சியில் நின்று நடனமாடிய பெண்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

Woman Dances on the top of tree in Jammu and Kashmir | ஜம்மு & காஷ்மீர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மரத்தின் உச்சியில் நின்று நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : பள்ளத்தாக்கிற்கு நடுவே மரத்தின் உச்சியில் நின்று நடனமாடிய பெண்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

26 Apr 2025 19:42 PM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் பெண் ஒருவர் மரத்தின் மீது நின்றுக்கொண்டு நடனமாடும் (Woman Dancing on Tree) வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நபர்கள் அது உண்மையா அல்லது பொய்யா என குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், பெண் மரத்தின் மீது நின்று நடனமாடும் வீடியோ உண்மையானதா, அது எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மரத்தின் மீது நின்றுக்கொண்டு நடனமாடிய பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) பகுதியை சேர்ந்த உஷா நாக்வன்ஷி (Usha Nagvanshi) என்ற பெண் தனது ஆச்சர்யமூட்டும் வீடியோவால் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், மரத்தின் உச்சியின் மீது நின்றுக்கொண்டு நடனமாடுகிறார். அவர் எந்தவித பாதுகாப்பும் இன்றி மிகப்பெரிய பல்லத்தில் அமைந்துள்ள அந்த மரத்தின் மீது பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய பெண்ணின் நடன வீடியோ

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோ

மிகவும் ஆச்சர்யமான மற்றும் அசாத்தியமான காட்சியை கொண்ட இந்த வீடியோவை இதுவரை 3,00,000 இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைக் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி சுமார் 16,000 பயனர்கள் இந்த வீடியோவுவின் கீழ் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோவுக்கு கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, அந்த பெண்ணை பார்த்து புவி ஈர்ப்பு விசை அழுவதாக ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். யாருடைய கட்டாயத்தின் பேரில் இவர் இப்படி ஆடுகிறார் என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீங்கள் தான் உலகின் தைரியமான பெண் என்றும் காற்றால் கூட உங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.