Viral Video : சிகிச்சை பலனின்றி இறந்த நாய்.. மருத்துவரைத் தாக்கிய இளம் பெண்.. வைரலாகும் வீடியோ!

Veterinarian Attacked : ஒரு செல்ல நாய் சிகிச்சை பலனின்றி இறந்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயின் இறப்புக்கு மருத்துவர் பொறுப்பல்ல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்ணின் செயல் கொலை முயற்சி எனவும், அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Viral Video : சிகிச்சை பலனின்றி இறந்த நாய்.. மருத்துவரைத் தாக்கிய இளம் பெண்.. வைரலாகும்  வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

23 Apr 2025 23:36 PM

செல்லப்பிராணிகளைப் (Pets) பிடிக்காத மனிதர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு நாய்கள், பூனைகள் (Dogs, cats) போன்ற செல்லப்பிராணிகள் மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகும் தன்மை கொண்டவை. அதிலும் தாம் வளர்த்த நாய் அல்லது பூனை இறந்துவிட்டால் நம்மால் தாங்கிக்கொள்ளக்கூட முடியாது. அந்த விதத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அதன் உரிமையாளரான இளம் பெண் (Young woman) ஒருவர் மருத்துவரைத் (Veterinarian) தாக்கும் சம்பவமானது, இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது கடந்த 2025, ஏப்ரல் 17ம் தேதியில் நடந்துள்ளது. இது எந்த இடத்தில் நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வீடியோவில் செல்லப்பிராணியான நாய் ஒன்று முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து படுத்தபடி இருக்கிறது, அந்த நாயைக் கால் நடை மருத்துவர் ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். திடீரென சிகிச்சை பலனின்றி அந்த நாயானது உயிரிழந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் நாய்க்குச் சிகிச்சை பார்த்த மருத்துவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளார். இந்த சம்பவமானது இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நாய் இறந்த சோகத்தில் அதன் உரிமையாளர் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

கால்நடை மருத்துவர் தாக்கப்பட்ட அந்த வீடியோ :

இந்த வீடியோவில், மருத்துவர் எவ்வாறு தாக்கப்பட்டார் என்று பார்த்தாலே கொடூரமாக உள்ளது. உரு உயிரினத்தின் மரணம் எப்போது மனிதர்களின் கையில் இல்லை என்பது உண்மை. அந்த செல்லப்பிராணிக்கு அந்த மருத்துவர் சரியான சிகிச்சையை அல்லது தவறான சிகிச்சை கொடுத்தாலும் அதன் உயிர் அவரின் கையில் இல்லை. மக்கள் தற்போது குழந்தைகளைப் போல் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். வீட்டில் குழந்தைகள் இல்லாதவர்கள் கூற நாய் மற்றும் பூனைகளைக் குழந்தையாக நினைத்து வளர்த்து வருகின்றனர்.

இது பரவலாகப் பல இடங்களில் நடந்து வருகிறது. செல்லப்பிராணிகளைக் குழந்தையாக நினைத்து வளர்ப்பது தவறில்லை, ஆனால் அது செய்யும் சேட்டைகள் உங்களைத் தவிர மற்றவர்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்தக் கூடாது. செல்லப்பிராணிகள் வளர்ப்பைத் தொடர்ந்து, அவற்றின் இறப்பும் நம்மை மிகுந்த சோகத்திற்கு உட்படுத்தும். ஆனால் வைரலாகும் இந்த வீடியோவில் அந்த பெண் மருத்துவரைத் தாக்கியது முற்றிலும் தவறு. ஒருவரை அனுமதி இல்லாமல் தொடுவதே தவறு, அந்த கால்நடை மருத்துவர் நாய்க்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போது, பின் இருந்து அவரின் தலைமுடியைப் பிடித்துத் தாக்கியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

வைரலாகும் இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “இது முற்றிலும் கொலை முயற்சி, அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார். இரண்டாவது பயனர் “அந்த நாய் இறந்தது மருத்துவரின் தவறு இல்லை, உரிமையாளரை உடனடியாக சிறையில் அடைக்கவும் என்று மற்றொரு பயனர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.