Viral Video : ரீல்ஸ் மோகம்.. ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் செய்த அதிர்ச்சி சம்பவம்!
Dangerous Adventure On The Train Tracks : உத்திரப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் ரயில் தண்டவாளத்தில் ஆபத்தான சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இச்செயலைச் செய்துள்ளார். ஆனால், வீடியோவில் தோன்றுவது போல அவர் தண்டவாளத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ
சமூக ஊடகங்களின் (Social media) வளர்ச்சியைத் தொடர்ந்து மக்களிடையே ரீல்ஸ் (Reels) மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் நோக்கத்துடன் பல அதிர்ச்சிகரமான செயல்களையும் செய்து வருகின்றனர். அப்படி தற்போது உத்திர பிரதேசத்தில் (Uttar Pradesh) இளைஞர் ஒருவர் செய்த காரியமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா?. உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், ரீல்ஸ் மீதுள்ள மோகம் அதிகரித்த காரணமாக ரயில் தண்டவாளத்தில் (Train tracks) படுத்தபடி எடுத்துள்ள வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் ரயிலின் தண்டவாளத்தின் அடியில் படுத்தபடி, வேகமாகச் செல்லும் ரயிலின் கீழ் புறத்தை வீடியோ எடுப்பதுபோல் உள்ள காட்சிகள் தற்போது இணையத்தளங்களின் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோவை கூர்ந்து கவனிக்கும் போது, அந்த வீடியோவை எடுக்கும்போது அந்தநபர் ரயிலின் தண்டவாளத்தில் இல்லை என்பது தெரிகிறது. அந்த ரயிலின் கீழ் தனது போனை ஒரு இருத்தி நிறுத்திவிட்டு அவர் எடுத்திருக்கிறார் என்று தெரியவருகிறது.
இந்த வீடியோவின் கடைசி காட்சியில் வீடியோ வித்தியாசமாகத் தென்படுகிறது. இதனால் அந்த நபர் ரயில் தண்டவாளத்தின் அடியில் படுத்து இந்த வீடியோவை எடுத்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று எதிர்க்கிறது. தற்போது இந்த வீடியோவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
इस रीलपुत्र का नाम रंजीत चौरसिया है। पटरी पर लेटा, अपने ऊपर से पूरी ट्रेन गुजार दी। बाकायदा इसकी रील बनाई। अब रीलपुत्र गिरफ्तार है और जेल जा रहा है।
📍जिला उन्नाव, उत्तर प्रदेश pic.twitter.com/7IrQ42MDsM— Sachin Gupta (@SachinGuptaUP) April 7, 2025
சமீபகாலமாக மக்களிடையே இணையதள பயன்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், பிரபலமாகவேண்டும் என்ற மோகமும் அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் மக்களிடையே பேமஸ் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், பைத்தியக்காரத்தனமான செயல்களையும் செய்கின்றனர். இதில் ரயிலின் முன்பு சாகசம், ரயிலின்மேல் தொங்கிக்கொண்டு வருவது மற்றும் ரயிலின் தண்டவாளத்தில் சாகசம் செய்வது என முட்டாள்தனமான காரியங்களைச் செய்து வருகின்றனர்.
இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் என இந்திய அரசும் பல விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இவ்வாறு ரயிலில் சாகசம் செய்யும் எண்ணிக்கை மட்டும் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் கருத்துக்கள் :
இந்த வைரல் வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் அந்த இளைஞர் அவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறார். இப்படி ஒரு அச்சுறுத்தலான விஷயத்தைச் செய்து இணையத்தில் பிரபலமாக வேண்டுமா என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் இந்த வீடியோவை அந்த நபர் எடுக்கவில்லை, இந்த வீடியோவை உற்றுப்பார்த்தாலே தெரிகிறது, இது முற்றிலும் எடிட்டிங் என்று என மற்றொரு நபரும் தெரிவித்துள்ளார்.