Viral Video : மானுடன் செல்பி எடுத்த பெண்… நொடிப்பொழுதில் மான் செய்த தரமான சம்பவம்… வீடியோவைப் பாருங்க!

Woman Selfie With Deer : ஒரு பெண் காட்டில் மானுடன் செல்பி எடுக்க முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மானின் அருகில் சென்று செல்பி எடுத்தபோது, மான் கோபமடைந்து தாக்க முயன்றது. இதனையடுத்து அந்த பெண் பயந்து ஓடினார். இந்த சம்பவம் இயற்கையுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Viral Video : மானுடன் செல்பி எடுத்த பெண்… நொடிப்பொழுதில் மான் செய்த தரமான சம்பவம்… வீடியோவைப் பாருங்க!

வைரல் வீடியோ

Published: 

08 Apr 2025 21:41 PM

சமீப காலமாக மக்கள் காடுகளில் டிரெக்கிங் (Trekking in the forests) செல்வதை மிகவும் விரும்புகின்றனர். பரபரப்பான உலகத்தில் இருந்து கொஞ்ச நேரமாவது விடுப்பு எடுக்கும் விதத்தில், காடுகளுக்கு டிரெக்கிங் சென்று வருகின்றனர். அதுபோல காடுகளுக்குப் பயணிக்கும்போது காட்டு விலங்குகளைப் (Wild animals) பார்ப்பது இயல்புதான். அவற்றை நாம் துன்புறுத்தாமலிருக்கும் வரை அதுவும் நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ ஒன்றில் பெண் (Woman) ஒருவர், மிகப்பெரிய மானுடன் (Deer) செல்பி எடுத்த காட்சியானது வைரலாகி வருகிறது. அந்த பெண் மானின் அருகில் சென்று தனது போனில் செல்பி எடுக்க முயற்சி செய்கிறார். அப்போது தனது போனில் புகைப்படங்களை எடுத்தபடி மானின் அருகில், தனது கையை நீட்டுகிறார். அதன் பின் அந்த மான் செய்த விஷயமானது வீடியோவை பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

அந்த பெண் மானிடம் தனது கையை நீட்டுகிறார்,  ஆனால் அந்த மான்,  தன்னை அந்த பெண் தாக்க வருவதாக எண்ணி தனது கொம்புகளால் தாக்குவதற்கு முயற்சி செய்கிறது. செல்பி எடுத்துக்கொண்டிருந்த அந்தப்பெண்ணும் பயந்து உடனே மானிடம் இருந்து விலகுகிறார். தற்போது இந்த வீடியோவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

இந்த வீடியோவை , amazingtaishun என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண், அடர்ந்த காட்டில் மிகப்பெரிய மானின் முன் நிற்கிறார். காட்டிற்கு ட்ரெக்கிங் சென்ற அவர், அந்த மானின் முன் நின்று செல்பி எடுக்க முயற்சி செய்கிறார். காட்டு மான்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானவை, அதன் தாக்குதலில் உயிர் போய்விடும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர்.

எந்த அளவிற்கு அழகு இருக்கிறதோ, அதே அளவிற்கு மான்கள் மிகவும் ஆபத்தானவையும் கூட, அதிலும் பெரிய மான்கள் சொல்லவே தேவையில்லை. அந்த பெண், மானின் முன் நின்று செல்பி எடுக்கிறார். பின் அந்த மானிடம் தனது கையை நீட்டியபடி புகைப்படம் எடுக்கிறார். திடீரென கோபப்பட்ட மான் தனது நீண்ட கொம்புகளை வைத்து, அந்த பெண்ணை தாக்குவதற்கு முயற்சி செய்கிறது. உடனே அந்த பெண் பயந்து ஓடுவது போல் இந்த வீடியோவில் இருக்கிறது. இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் ” அந்த மானின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா “அட என்னடா இது செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றுதான் அந்த மான் நினைக்கும் என அவர் கூறியுள்ளார். இரண்டாவது நபர் இயற்கை எவ்வளவு அழகானதோ அவ்வளவு ஆபத்தானது. இந்த மாதிரி மானுடன் செல்பி எடுப்பது அவ்வளவு நல்லதல்ல என்று கூறியுள்ளார். மேலும் பல்வேறு பயனர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.