Viral Video : என்ன ஒரு புத்திசாலித்தனம்.. உருளைக் கிழங்கின் தோலை இப்படிகூட உரிக்கலாமா?

Woman Uses Washing Machine To Peel Potatoes : ஒரு பெண் துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கிலோ கணக்கில் உருளைக்கிழங்குகளின் தோலை நீக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை நகைச்சுவையாகக் கருதினாலும், பலர் இதன் நடைமுறை சாத்தியத்தைப் பற்றி விவாதிக்கின்றனர்.

Viral Video : என்ன ஒரு புத்திசாலித்தனம்.. உருளைக் கிழங்கின் தோலை இப்படிகூட உரிக்கலாமா?

வைரல் வீடியோ

Published: 

07 Apr 2025 22:01 PM

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்தைத் (Modern technology) தாராளமாகப் பயன்படுத்தும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் இயந்திரங்கள் மூலம் பல பணிகளை எளிதாக முடித்து வருகின்றனர். இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண் (Woman)  ஒருவர் உருளைக்கிழங்கின் (potato)  தோலை உரிப்பதற்காகச் செய்த செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா? அவர் உருளை கிழங்கின் தோலை உரித்து சுத்தம் செய்வதற்காக, துணிகளைச் சலவை செய்யும் வாஷிங் மிஷினை (Washing Machine) பயன்படுத்தியுள்ளார். அந்த பெண் கிலோ கணக்கில் உருளைக் கிழங்கின் தோலை கையால் சுத்தப்படுத்த முடியாமல் போன நிலையில், அவர் துணிகளைச் சுத்தம் செய்யும் வாஷிங் மிஷின் உதவியோடு உருளைக்கிழங்கைச் சுத்தம் செய்துள்ளார்.

தற்போது இவர் செய்த இந்த விஷயமானது இணையத்தளங்களில் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவின் கீழ் பல்வேறு நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

இணையத்தில் கவனம்பெறும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில், பெண் ஒருவர் சமையலுக்காகக் கிலோ கணக்கில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்துள்ளார். அதில் உருளையின் கிழங்குகள் அதிகமாக இருக்கிறது. பலரும் உருளைக்கிழங்கின் தோலை தங்களின் கைகளால் சுத்தம் செய்வது வழக்கம்தான். ஆனால் இந்த வீடியோவில் இந்த பெண் அப்படிச் செய்யவில்லை, அவர் அந்த தோலைச் சுத்தம் செய்வதற்கு வாஷிங் மிஷினை பயன்படுத்தியுள்ளார்.

சாதாரணமாக மக்கள் வாஷிங் மிஷினை எதற்குப் பயன்படுத்துவார்கள்? தங்களின் துணிகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பெண் கிலோ கணக்கில் இருக்கும் உருளைக்கிழங்குகளைச் சுத்தம் செய்வதற்கு வாஷிங் மிஷினை பயன்படுத்தியுள்ளார். அந்த வாஷிங் மிஷினும், துணைகளைச் சுத்தம் செய்வது போல் உருளைக் கிழங்குகளின் தோல்களையும் நீக்கி சுத்தம் செய்கிறது.

அந்த பெண் சுத்தம் செய்த பிறகு உருளைக் கிழங்குகளை எடுக்கிறார். தோள்கள் இல்லாமல் பளபளவென உருளைக்கிழங்குகள் சுத்தமாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில், படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பல ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள், தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இதில் பயனர் ஒருவர் “வாஷிங் மிஷின் துணிகளைத் துவைப்பதற்கு மட்டுமில்லாமல், உருளைக்கிழங்கின் தோலை உரிப்பதற்கும் பயன் படுமா” என்று கேட்டுள்ளார். மேலும் இரண்டாவது நபர் “உருளைக் கிழங்குகளை உரிக்கும் நவீன மிஷின், வாஷிங் மிஷின்” என்று கூறியுள்ளார்.