Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : அடே என்னடா இது.. துணி பையில் பாம்பு.. வகுப்பறையில் விளையாடிய மாணவன்.. வைரலாகும் வீடியோ!

School Boy Playing With Snake : மாணவர் பள்ளிக்குப் பாம்பைக் கொண்டு வந்து வகுப்பறையில் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் செயல் பலரது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாம்பானது அவரை கடித்தபோதிலும், எதிரில் இருந்த மற்றொரு மாணவர் மீது தூக்கி எரிந்து விளையாடுகின்றனர்.

Viral Video : அடே என்னடா இது.. துணி பையில் பாம்பு.. வகுப்பறையில் விளையாடிய மாணவன்.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 17 Apr 2025 19:44 PM

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் (student) , பள்ளிக்குச் செல்லும் பையில் புத்தகங்கள் (Book bag) , நோட் என படிக்க உதவும் பொருட்களைக் கொண்டு செல்வார்கள். தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் துணிப் பையில் பாம்பினை  (snake) கொண்டு சென்றுள்ளார். அவர் அந்த பாம்பைக் கொண்டு சென்றது மட்டுமில்லாமல், அந்த பாம்பை கையால் பிடித்த வகுப்பறையின் உள்ளே வைத்து விளையாடியுள்ளார். தற்போது இவரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவன் பாம்பைத் தனது கையில் வைத்து விளையாடுகிறார். அந்த பாம்பும் சீண்டியபடியே இருக்கிறது. மேலும் அந்த மாணவனைக் கட்டை விரலில் சுமார் 2 முதல் 3 முறை தாக்குகிறது.

அந்த பாம்பைப் பார்த்தால் விஷம் உள்ள பாம்பைப் போலத் தெரியவில்லை. விஷம் இல்லை என்றாலும் சாதாரணமாகப் பாம்பைக் கண்டாலே பலரும் பயந்து ஓடுவது உண்டு. ஆனால் இந்த மாணவனைச் செயலானது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசித்திரமான வீடியோவானது, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோ குறித்து முழுமையாகப் பார்க்கலாம்

இணையத்தில் வைரலாகும் அந்த மாணவனை வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by ._. <3 (@_aa_okkati_adakku_)

அந்த மாணவன், பள்ளியில் அந்த பாம்பை வைத்து விளையாடுகிறார். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பின்னால் பெஞ்சில் அமர்ந்து இந்த மாணவர்கள் பாம்பை வைத்து விளையாடுகின்றனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பாம்பை வைத்திருந்த மாணவர், அவரின் முன்னாள் போனை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு மாணவரின் மீது பாம்பைத் தூக்கி வீசுகிறார். தற்போது இந்த காணொளியானது இணையத்தில் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது எங்கு நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.

நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பல பயனர்கள் அந்த மாணவர் மற்ற மாணவர் மீது வீசிய பாம்பு போலியானது என்று கூறினார். இருப்பினும், அந்த பாம்பு உண்மைதான். அந்தப் பையன் தன்னுடன் ஒரு உண்மையான பாம்பைக் கொண்டு வந்தது தெரிகிறது.

சில பயனர்கள் இதை லேசாக எடுத்துக் கொண்டாலும், பல பயனர்கள் மாணவரின் மிகவும் பொறுப்பற்ற, ஆபத்தான செயலால் கோபமடைந்துள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்ட்டாகிராம் பயனர் @_aa_okkati_adakku_ என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளைக் கொண்டுள்ளது. மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...