Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாகப் பாம்பு செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்!

Snake Attacks A Man : ஒரு நாகப்பாம்பை காப்பாற்றிய பின், அதை ஒரு நபர் முத்தமிட முயன்றதால் பாம்பு கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பின் தலையைத் தொட்டு முத்தமிட முயன்றதால், பாம்பு தற்காப்பு நடவடிக்கையாக அவரது முகத்தில் கடித்தது. இந்த சம்பவம், வனவிலங்குகளுடன் விளையாடுவதன் ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது.

Viral Video : பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாகப் பாம்பு செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 24 Apr 2025 22:39 PM

பாம்புகள் (Snakes) என்றால் கடினமான விஷமுடையது என்று அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் சாதாரணமாக மனிதர்கள் (Humans) பாம்பிடம் நெருங்குவதில்லை. அந்த வகையில் மீட்கப்பட்ட நாக பாம்பைஒருவர் அதன், தலையின் பின்புறம் முத்தமிட முயன்றுள்ளார். அந்த பாம்பை மீட்பு பணியாளர் (Rescue worker) ஒருவர் பிடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நபர் ஒருவர் அந்த பாம்பின் தலைப் பகுதியின் (Snake’s head) பின் புறமாக முத்தமிட்டுள்ளார். அதன் எதிர்வினையாக அந்த நாகப் பாம்பு அவரின் உதட்டில் தாக்கியுள்ளது. இந்த சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியானது ஆரம்பத்தில் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அந்த நபர் செய்த வேலையைப் பார்க்கும்போது சிரிப்புதான் ஏற்படுகிறது. சாதாரணமாக இருந்த பாம்பிற்குக் கோபத்தை ஏற்படுத்தி, அதனுடன் உதட்டில் கடியும் வாங்கிவிட்டார்.

இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வாயில்லா ஜீவனான பாம்பிடம் கடிவாங்கிய நபரைக் கலாய்த்து வருகின்றனர். பாம்பின் குணம், அதைப் பிடிப்பவர்களைக் கடிப்பதுதான். அதனால் இது முழுக்க மனிதர்களின் தவறு என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பாம்பை இவ்வாறு வைத்து விளையாடினாள் அது இதைத்தான் செய்யும் எனவும் காப்பாளர் தங்களின் கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் பாம்பின் வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

இந்த வீடியோவில், ஒரு நாகப்பாம்பைக் காப்பாற்றிய பிறகு, அதை ஒரு பாட்டிலில் அடைப்பதற்குப் பதிலாக, பாம்பு பிடிப்பவர் அதை நபர் ஒருவர் முத்தமிட முயன்றார். ஆனால் அடுத்த கணம், பாம்பு திரும்பி அந்த மனிதனின் முகத்தில் கடித்தது. வீடியோவில், பாம்பு எவ்வளவு ஆக்ரோஷமாகத் தாக்குகிறது என்பதை வீடியோவில் நீங்கள் பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும். அது தாக்கிய உடனே அந்த நபரும் அதிர்ச்சியடைந்து பின்வாங்கினார்.

இருப்பினும், பாம்பு அவரைக் கடித்ததா? இல்லையா? என்பது வீடியோவிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை. இந்த காணொளியைப் பார்க்கும்போது, ​​அது வட இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. எந்த மாநிலம் என்பது சரியாகத் தெரியவில்லை. இந்த வீடியோவை @therealtarzann என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ இதுவரை 25,000 பேர் லைக் செய்துள்ளனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசங்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “நாகப்பாம்பு என்றாலே ஆபத்தானது, அதனிடம் விளையாடுபவர்களுக்கு இந்த நபர் ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளார். இரண்டாவது நபர் இந்த மாதிரியான முட்டாள்தனமான விஷயங்களைச் செய்து, அவர்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்து விடுகிறது என்று கூறியுள்ளார்.

பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!
பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகுல் காந்தி!...
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?
தர்பூசணி? முலாம்பழம்? கோடைகாலத்துக்கு ஏற்றது எது?...
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா?...
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்
இறுதி சடங்கின்போது கல்லறையில் இருந்து எழுந்த பெண் - அதிர்ச்சி சம்...
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?
H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து?...
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!
பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்.. எதிர்வினையாக பாம்பு செய்த சம்பவம்!...
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!
பல்வேறு கெட்டப்களில் வடிவேலு.. கேங்கர்ஸ் படத்தின் ஸ்பாட்லைட்!...
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!
ரெட்ரோ படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா கொடுத்த ரிவ்யூ..!...
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர் - பரபரப்பு சம்பவம்...
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே!...
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்
ஆதாரம் இருந்தால் இந்தியா காண்பிக்கட்டும் - பாகிஸ்தான் அமைச்சர்கள்...