Viral Video : ரிப்பன் வெட்டுவதில் தகராறு.. மணமகனுக்கு நோ சொன்ன மணமகள்.. சண்டையில் இறங்கிய மாப்பிள்ளை தோழர்கள்!
Haridwar Wedding Fight : ஹரித்வாரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், ரிப்பன் வெட்டும் சிறிய போட்டி பெரிய சண்டையாக மாறியது. மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் மணமகள் திருமணத்தை நிறுத்திவிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நிகழ்ச்சி (Wedding ceremony) என்றால் இரு மனங்களுடன், இரு குடும்பங்கள் இணையும் நிகழ்வு என்பார்கள். அந்த வகையில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சி திருமணம்தான். அதில் பல பிரச்னைகள் வந்தாலும் சமாதானம் செய்து திருமணம் நடந்தும் இருக்கிறது, நடக்காமல் போயிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹரித்வாரில் திருமண நிகழ்ச்சியின் போது மணமக்கள் (Bride and groom) இடையே நடந்த சாதாரணமான போட்டி திருமணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது தெரியுமா? இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் (Haridwar) திருமண நிகழ்ச்சியின் போது மணமக்கள் இடையே ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் (Ribbon cutting ceremony) பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குவாதத்தில் யார் ரிப்பன் வெட்டுவார் என்ற போட்டி நிலவியுள்ளது. இந்நிலையில் மணமகளின் தரப்பு உறவினர்களை, மணமகனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கிண்டல் செய்துள்ளனர். இது அப்படியே தகராறாக மாறியுள்ளது. மேலும் வாக்குவாதம் நீண்டுகொண்டே போகக் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மணமகள் திருமணமே வேண்டாம் என, புது மாப்பிள்ளைக்கு நோ சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த பிரச்னையானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சாதாரணமாக ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிக்காக ஒரு கல்யாணமே நின்ற நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரித்வாரில் இரு குடும்பங்களும் திருமண விழாவின் போது சண்டையிட்ட சம்பவமானது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
हरिद्वार में शादी समारोह के दौरान दुल्हा और दुल्हन वर और वधु पक्ष के बीच रिबन काटने की रस्म के दौरान कहासुनी शुरू हो गई। रिबन काटने की रस्म के दौरान लड़के पक्ष की ओर से लड़कियों पर की गई छींटाकशी से विवाद शुरू हुआ। लड़की पक्ष ने इसका विरोध किया तो कहासुनी शुरू हो गई जो जल्दी ही… pic.twitter.com/AarZkp5uk6
— bhUpi Panwar (@askbhupi) April 23, 2025
இந்த வீடியோவில், சட்டை எல்லாம் கிழிந்த நிலையில், கேமராக்கள் மீது கல்லை எரிந்து மணமகனின் உறவினர்களும், நண்பர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மணமகளின் குடும்பத்தின் மீது கற்களைத் தூக்கியெறிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் நடந்த விஷயமானது என்று ஒட்டுமொத்த திருமணத்தையே நிறுத்திவிட்டது. இதுபோன்ற சிறு சிறு காரியங்களுக்குச் சண்டையிடுவது, ஒருவரின் கல்யாணத்தையே நிறுத்திவிட்டது. இதற்கு இரு குடும்பங்களும் சமாதானமாகிப் போயிருந்தால் இத விபரீத நிகழ்வு நடந்திருக்காது.
வீடியோவின் கீழ் இணையப் பயனர்களின் கருத்து ;
இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் முதல் பயனர் ஒருவர் “ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிக்கு எல்லாம் சண்டை போடுவீர்களா? இந்தியா எதை நோக்கிப் போகிறது என்று கூறியிருந்தார். இரண்டாவது பயனர் “ஒரு திருமணத்தின் பெண்ணின் குடும்பத்தை ஏளனமாகப் பேசுவதும், நடத்துவதும் ஆப்பிளை வீட்டின் நடைமுறையாக மாறிவிடுகிறது என்றும் கூறியுள்ளார்.