Viral Video : விமானத்திற்கு ஏர் அடிச்சு பார்த்திருக்கீங்களா.. கை பம்ப் மூலம் காற்றடித்த விமானியின் வீடியோ வைரல்!
A Humorous Incident By A Pilot : ஒரு விமானி கை பம்பைப் பயன்படுத்தி விமான டயருக்கு காற்று அடிக்கும் வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் சைக்கிள் டயருக்குக் கூட கை பம்பைப் பயன்படுத்துவது சிரமம் என்பதால், விமானி இவ்வாறு செய்வது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தி, இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
விமானம் (Airplane) என்றாலே நம் நினைவிற்கு வருவது மிகவும் எளிதாகவும், விரைவாகவும் நாம் செலவிற்கும் இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதுதான். என்னதான் ஆகாயத்தில் பறந்தாலும், அதன் தர இயக்கத்திற்கு உதவியாக இருப்பது, விமானத்தின் டயர்கள்தான் (Airplane tires). அது இல்லை என்றால் விமானம் பெரும் விபத்துக்குள்ளாகும். கடந்த ஆண்டு கூட தமிழகத்தில் விமானத்தின் டயர் விமானத்தைவிட்டு வெளியாகாமல் இருந்த நிலையில், விமானம் பல மணி நேரமாக வானில் வட்டமடித்து நமக்குத் தெரியும். அந்த விதத்தில் விமானத்தின் டயருக்கு காற்று முக்கியம், அதை நாம் பலரும் இயந்திர காற்றடைப்பானை (Mechanical air conditioner) வைத்து, டயருக்கு காற்றடித்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது வைரலாகிவரும் வீடியோவின் படி, விமானி ஒருவர் விமானத்தின் டயருக்கு, கையால் பயன்படுத்தும் ஏர் பம்ப்பை கொண்டு ஏர் அடைக்கும் காட்சியானது வைரலாகி வருகிறது.
சாதாரணமாகச் சைக்கிள் டயருக்கு காற்றடைப்பதே பெரும் பாடாக இருக்கும். ஆனால் இந்த திறமையான விமானி ஒருவர் கை ஏர் பம்ப்பை பயன்படுத்தி ஏர் அடைக்கும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வாறு இந்த விமானி இப்படிச் செய்கிறார் எனப் பலரையும் யோசிக்கவைத்துள்ளது. மேலும் பலரும் இந்த வீடியோவை பார்த்துச் சிரித்து வருகின்றனர். விமானியை இணையத்தில் வாட்டிவருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவால் மக்களால் தங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வீடியோவில், ஒரு வெளிநாட்டு விமானி ஒருவர் இந்திய மக்கள் ஸ்டைலில், விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானத்தின் முன் டயரை நிரப்புவதைப் பார்க்கமுடியும். ஏர் கம்ப்ரசர் இல்லை, உயர் தொழில்நுட்ப இயந்திரம் இல்லை, ஒரு எளிய கை பம்ப் வைத்து அவர் ஏர் அடித்த காட்சி வைரலாகி வருகிறது
இந்த வீடியோவை பார்த்தும் அறிவாளிகள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஏராளமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரைக்கும் பஞ்சர் கடையில் உட்காந்திருக்கும் ஒரு சாதாரண நபர்தான் கை பம்ப் மூலமா எளிமையாக காற்றடிக்க முடியும் நினைச்சுட்டு இருந்தோம், ஆனால் இந்த வெளிநாட்டு பைலட் செய்த சம்பவமானது இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. இந்த வீடியோவை cjaune_will_b என்ற பயனர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவில் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதில் முதல் பயனர் ஒருவர் “நான் சைக்கிளுக்கு கை ஏர் பம்ப் மூலம் ஏர் அடைச்சு பார்த்திருக்கிறேன், ஆனால் விமானத்திற்கு ஏர் அடைச்சு இப்பதான் பார்க்கிறேன் ஆனால் இது எனக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்குகிறது” என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இந்த விமானி இந்தியாவின் மக்களை விடமும் மிகவும் அறிவாளியாக இருக்கிறாரே, ஆனால் விமானத்திற்கு எவ்வாறு ஏர் அடிப்பார் என்றும் கூறியுள்ளார்.