Viral Video : கோழிக்கூண்டில் குழந்தைகளைக் கூட்டிச்சென்ற நபர்.. நெட்டிசன்கள் அதிர்ச்சி..!
Boys in the chicken coop : தெலுங்கானாவில், இரு சிறுவர்களை கோழி கூண்டில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சிலர் இதை வேடிக்கையாகக் கருதினாலும், பெரும்பாலானோர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைரல் வீடியோ
பொதுவாகக் குழந்தைகளைப் (Children) பெற்றோர்கள் பைக்கில் பின் சீட்டில் அமரவைத்து வேறு இடங்களுக்குக் கூட்டிச் செல்வது வழக்கம். ஆனால் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் கோழிகளைப் பிடித்து (Chicken coop) மற்ற இடத்திற்குக் கொண்டுபோகும் கூண்டைப் பயன்படுத்தி இரு சிறுவர்களை எங்கேயோ கூட்டிச்செல்வது போல இருக்கும் வீடியோவானது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் (Telangana) நடந்த இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. கோழிகளைக் கொண்டு செல்லும் கூண்டில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதா என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோவில் சிறிய ரக பைக்கில் நபர் ஒருவர் கொலைகளை ஏற்றி செல்லும் கூண்டைக் காட்டியிருக்கிறார். அந்த கூண்டானது ஓரளவு பெரியதாகவே இருக்கிறது.
அந்த கூண்டிற்குள் கோழிகளை (Chickens) அழைத்துச் செல்வார் என்று பார்த்தால், இரு சிறு குழந்தைகளை அமர வைத்துக் கூட்டிச் சென்றுள்ளார். இந்த யோசனையானது, பைக்கில் செல்லும்போது குழந்தைகள் உறங்கினால் கீழே விழமாட்டார்கள் எனவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. இந்த வீடியோவானது தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது. மேலும் பல மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
இணையத்தில் ட்ரெண்டாகும் அந்த வீடியோ :
இந்த வீடியோவில், குழந்தைகள் இருவர் கோழிகளைக் கொண்டு செல்லும் கூண்டில் அடிபட்டு இருக்கின்றனர். மேலும் அந்த பைக்கை ஓட்டுபவர் அவர்களின் தந்தை என்றும் கூறப்படுகிறது. தற்போது வைரலாகும் இந்த வீடியோவானது, பலர் மத்தியும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அது எவ்வாறு சிறுவர்களை இவ்வாறு கூண்டில் அழைத்து செல்லலாம் என்று ஒருதரப்பினர்களும், அவரின் தந்தை எவ்வாறு குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பார்.
மற்றொரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோவானது இதுவரை சுமார் 3.3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் பல ஆயிரம் லைக்-குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் சிறுவர்கள் குறித்து பலரும் பரிதாபப்பட்டு வருகின்றனர். மேலும் பல இணையவாசிகள் தங்களின் அமர்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
டெண்டிங் வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் ;
இந்த வீடியோவின் கீழ் முதல் இணையப் பயனர் ஒருவர் “இந்தியாவில் மட்டுமே மக்களுக்கு இதுபோன்ற யோசனைகள் வருகிறது, யாரவது குழந்தைகளின் பாதுகாப்பைப் பார்த்தீர்களா?. இதுபோன்ற செயல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார். இரண்டாவது பயனர் பலரும் வேடிக்கையாகப் பார்த்தாலும், இது மிகவும் அப்படித்தைத்தானது. பைக்கில் ஏறும்போது குழந்தைகளின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். பலரும் இந்த வீடியோவின் கீழ் தங்களின் விமர்சனங்களைக் கொட்டி தீர்க்கின்றனர்.