Viral Video : ஐயோ க்யூட்டு.. பறவைக்கு உணவளித்த க்யூட் சிறுமி.. நெட்டிசன்களை கவரும் வீடியோ!
Cute Girl Feeding Bird : சமூக வலைத்தளங்களில் ஒரு அழகான சிறுமி, ஒரு சிறிய மஞ்சள் பறவைக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சிறுமியின் அன்பு மற்றும் கருணையான செயல் பலரையும் கவர்ந்துள்ளது. இது தற்போதைய தலைமுறை குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் உணர்வுபூர்வமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

பொதுவாகக் குழந்தைகளின் (Children) குறும்புத்தனமான (Naughty) வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாக வீடியோ ஒன்றில் சிறுமி ஒருவர், மஞ்சள் நிற சிறிய பறவைக்கு (little yellow bird) உணவளிக்கும் (Feeding) வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த க்யூட் சிறுமி ஸ்பூனால் சிறிய மஞ்சள் பறவைக்கு உணவை ஊட்டுகிறார். இந்த வீடியோவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுமியின் இந்த செயலானது நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. தற்போதுள்ள ஜெனரேஷன் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தங்கள் வயதிற்கு அப்பாற்பட்ட சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் விதத்தில் விஷயங்களைச் செய்கிறார்கள்.
தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு சிறுமி ஒரு சிறிய பறவைக்கு உணவளித்து, அதன் பசியைப் போக்கும் விதத்தில் அதற்கு உணவளிக்கிறார். தற்போது இந்த காணொளியானது இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறுமியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாக க்யூட் சிறுமியின் வீடியோ :
In a world where you can be anything, be kind.. 😊 pic.twitter.com/wfWlJjQxcY
— Buitengebieden (@buitengebieden) April 13, 2025
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவானது, இதுவரை சுமார் ஒரு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. தற்போதுள்ள குழந்தைகளுக்கு மிகவும் புத்திசாலித்தனம் அதிகமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வயதிற்கு மேற்பட்ட திறன்களையும், செயல்களையும் கொண்டுள்ளனர். போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் மத்தியில், பறவைக்கு உணவளிக்கும் குழந்தையின் வீடியோ இணையதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் இருக்கும் அந்த குழந்தையின் பசியாற்றும் எண்ணத்தையும், அவர் அந்த பறவைக்கு உணவளிக்கும் விதத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியிடம் மஞ்சள் நிற பறவையும் அழகாக உணவை வாங்கி உண்ணுகிறது. சிறுமி ஸ்பூனால் அதற்கு உணவை அளிக்க அதுவும் க்யூட்டாக உணவை மெல்லமாக உண்ணுகிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தையின் செயலையும் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
க்யூட் சிறுமியின் வீடியோவின் கீழ் இணையவாசிகள் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பல இணையவாசிகள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதில் சில கருத்துக்களை மட்டும் பார்க்கலாம். இதில் முதல் எக்ஸ் பயனர் ஒருவர் ” அந்த குழந்தைக்கே யாராவது உணவை ஊட்டவேண்டும், ஆனால் அந்த சிறிய குழந்தை பறவைக்கு உணவை அளிக்கிறதே என்று கூறியுள்ளார். மேலும் இரண்டாவது எக்ஸ் பயனர் குழந்தைகளுக்கு விலங்குகளிடம் கருணையுடனும், மரியாதையுடனும் இருக்கக் கற்றுக்கொடுப்பது அவர்கள் சிறந்த மனிதர்களாக மாற உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.