Viral Video : அம்மாடியோ எவ்வளவு பெருசு.. ஆற்றில் காணப்பட்ட அனகோண்டா.. இந்த வீடியோவை பாருங்க!
Large Anaconda Found In The River : ஒரு பிரம்மாண்ட அனகோண்டா பாம்பு ஆற்றில் நீந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாம்பின் அளவு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அனகோண்டாக்கள் விஷமுள்ளவை அல்ல என்றாலும், அவற்றின் அளவு மற்றும் பலம் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த வீடியோ 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

பொதுவாக பாம்புகள் (Snakes) அதிகமாக சிறிய உணவுகள் அதாவது, பறவைகள், தவளைகள் மற்றும் எலிகளை உணவாக உண்ணும். ஆனால் மிகப்பெரிய மலைப்பாம்புகள் என்று அழைக்கப்படும் அனகோண்டாக்கள் (Anacondas), பாம்புகள் அல்லது பெரிய விலங்குகளைக் கூட உண்ணும் அளவுக்கு பெரியவை என்பது கூறப்படுகிறது. இந்த வைகை பாம்புகள் அதனைவிட பெரிய அளவிலான உயிரினங்களையும் வேட்டையாடு உண்ணும் திறன் மற்றும் பலம் கொண்டது. மேலும் இதுபோன்ற வீடியோக்கள் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆற்றில் (river) பிரம்மாண்ட அனகோண்டா பாம்பு ஒன்று நீந்தி செல்வது போல் உள்ள வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பாம்பை பார்த்தல் நமது உடல் முழுவதும் புல்லரிக்கும், அந்த அளவிற்கு மிகவும் பெரிதாக இருக்கிறது. பாசி அடர்ந்த ஆற்றில் பிரம்மாண்ட அனகோண்டா பாம்பு மெல்லமாக நீந்தி செல்கிறது. இதை ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த பாம்பானது ஆற்றின் ஓரத்தில் மெதுவாக நீந்தி செல்வதுபோல் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை @dr.ajaykrishna_angara என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
View this post on Instagram
பாம்புகளில் மிகவும் பெரியவகை பாம்பு அனகோண்டா. இந்த பாம்புகளிடம் விஷம் இல்லாமல் இருந்தாலும், தனது ஒரு கடியினால் மனிதனை நகரமுடியாத அளவிற்கு செய்துவிடும். இந்த பாம்புகள் மிகவும் பெரியதாக இருக்கும், மேலும் அவைகள் பொதுவாக அடர்ந்த காடுகளில்தான் வசிக்கும் மக்கள் நடமாடும் இடத்திற்கு அவ்வளவு எளிதாக வராது. இந்த பாம்பு குடித்தவுடன் அதனது உடலினால் ஒரு உயிரினத்தை நொறுக்கிவிடும்.
தனது இருக்கு பிடியினால் பிடிபட்ட யிரினத்தின் எலும்புகளை சல்லி சல்லியாக நொறுக்கியிரும். அந்த அளவிற்கு மிகவும் பயங்கரமானது இந்த பெரிய வைகை பாம்புகள். தற்போது வைரலாகிவரும் வீடியோவில் இருக்கும் பாம்பானது சுமார் 20 நீளம் இருப்பதுபோல தெரிகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. மேலும் பலரும் இந்த வீடியோவில் இருக்கும் பாம்பை பார்த்து பதறி வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் ;
இந்த வீடியோவானது சுமார் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் பல்வறு இணையதளவாசிகள் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் கூறிவருகின்றனர். இந்த வீடியோவில் முதல் பயனர் ஒருவர் “இந்த பாம்பு சந்திரமுகி படத்தில் வரும் நாக பாம்பை விடவும் மிகவும் பெரியதாக இருக்கிறதே, இது உண்மையா? என்று கேட்டுள்ளார். இரண்டாவது நபர் இது உண்மையாகவே அனகோண்டாவா? அம்மாடியோ எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.